- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் வடிவேலுவிடம் சிக்கிக்கொண்ட புதுமுக இயக்குநர், வடிவேலுவுடன் மீண்டும் இணையும் பயங்கர வில்லன் - ஆர்பி...

நடிகர் வடிவேலுவிடம் சிக்கிக்கொண்ட புதுமுக இயக்குநர், வடிவேலுவுடன் மீண்டும் இணையும் பயங்கர வில்லன் – ஆர்பி சவுத்ரி எப்படி சமாளிக்க போறாரோ?

- Advertisement -

நடிகர் வடிவேலு, வைகைப்புயல் என அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர். சந்திரமுகி படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்ட போது, முதலில் வடிவேலு கால்ஷீட் இருக்கான்னு பாருங்க, என்று பி. வாசுவிடம் கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அந்தளவுக்கு நடிகர் வடிவேலு, மிக பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். தினமும் ஒரு படத்தில் அவர் நடிக்க வேண்டி இருந்தால், ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியாக சம்பளம் பேசாமல், ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் என சம்பளம் பேசி, மாதந்தோறும் ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் ஈட்டியவர் வடிவேலு.

அப்படி இருந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில், சிம்புதேவன் இயக்கத்தில் இரட்டை நாயகனாக நடித்து அசத்தினார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து தெனாலிராமன், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், எலி, நாய் சேகர் ரிட்டன் போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்தார். இதில் முதல் இரண்டு படங்கள் ஓரளவு வெற்றியை பெற்றது.

தமிழ் சினிமாவில் காமெடி புயலாக அதகளம் செய்துக்கொண்டிருந்த வடிவேலு, நடிகர் விஜயகாந்தை, பொதுவெளிகளில் விமர்சித்தார். திமுக மேடைகளில் ஏறி தேமுதிக குறித்து பேசினார். நடிகராக அவரை பார்த்த மக்கள், அதற்கு பிறகு அவரை விரும்பாமல் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இயக்குநர் ஷங்கருடன் பிரச்னை செய்ததால், சினிமாத்துறையினர் மத்தியிலும் அவரது இமேஜ் டேமேஜ் ஆனது. 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அதன்பிறகு சில படங்களில் நடித்து, நடித்து இப்போது மாமன்னன் படம் வடிவேலுவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால், அவரை காமெடி நடிகராக ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக நல்ல படங்களில் நடித்தால், இன்னும் பல ஆண்டுகள் வடிவேலு தமிழ் சினிமாவில் நீடித்திருக்க முடியும்.

இப்போது ஆர்.பி சவுத்ரி தயாரிக்கும் ஒரு புதிய படத்தை, புதுமுக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். வடிவேலுவுடன் இந்த படத்தில், மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். மாமன்னன் படத்துக்கு பிறகு, இருவரும் இந்த படத்தில் இணைகின்றனர். இது காமெடி படமா, ஆக்சன் படமா எனத் தெரியவில்லை. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியாக வராமல் தாமதிப்பது, நான் சொல்கிறபடி கதையை மாற்று, காட்சியை மாற்று என வம்பு செய்கிறவராக மாறியுள்ள வடிவேலு, புதுமுக இயக்குநரை பாடாய் படுத்தி விடுவாரோ, என்றுதான் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சற்று முன்