- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகையின் கெரியரையே குளோஸ் பண்ண பார்த்த வடிவேலு, இன்னும் எத்தனை புகார்தான் வரப்போகுதோ?

பிரபல நடிகையின் கெரியரையே குளோஸ் பண்ண பார்த்த வடிவேலு, இன்னும் எத்தனை புகார்தான் வரப்போகுதோ?

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் வடிவேலு ஒரு நீங்கா இடத்தை பிடித்திருந்தாலும், அவருடன் நடித்த சக நடிகர்கள் அவரை குறித்து பல மோசமான கருத்துகளை கூறி வருகின்றனர். வடிவேலு சக காமெடி நடிகர்களை வளரவிடமாட்டார் எனவும் அவர்களின் வாய்ப்புகளை பறித்துக்கொள்வார் எனவும் பலர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

வெங்கல் ராவ், போண்டா மணி, சிசர் மனோகர், முத்துக்காளை போன்ற பலரும் வடிவேலுவை குறித்து சமீபத்திய பேட்டிகளில் மிக கடுமையாக பேசி வருகின்றனர். இது போன்ற பேட்டிகளால் ரசிகர்கள் மத்தியில் “வடிவேலு இப்படிப்பட்டவரா?” என்பது போன்ற பேச்சுக்கள் உலா வருகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, வடிவேலு குறித்து ஒரு அரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

வடிவேலுவும் நடிகை கோவை சரளாவும் இணைந்து பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கியிருக்கிறார். குறிப்பாக வடிவேலுவை ரூமிற்குள் பூட்டி வைத்து வெளுக்கும் காமெடி காட்சி இப்போதும் அதிகம் பார்க்கப்பட்ட காமெடி காட்சி ஆகும்.

- Advertisement -

நாகேஷ்-மனோரமாவிற்கு அடுத்தபடியாக வடிவேலு-கோவை சரளா ஜோடிதான் மிக பிரபலமான காமெடி ஜோடியாக வலம் வந்தார்கள். இந்த நிலையில் அப்பேட்டியில் பேசிய செய்யாறு பாலு, வடிவேலு ஒரு கட்டத்திற்குப் பிறகு கோவை சரளாவுடன் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டதாக கூறியுள்ளார். தனக்கு ஜோடியாக கோவை சரளா நடித்தால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினாராம்.

இதனால் கோவை சரளாவின் கெரியரே காலி என்று பத்திரிக்கைகள் எழுத தொடங்கியதாம். ஆனால் அதன் பின் கோவை சரளா, தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தாராம். தெலுங்கு சினிமாவில் அவருக்கு அதிக வாய்ப்புகளும் வந்ததாக கூறியுள்ளார்.

 

 

- Advertisement -

சற்று முன்