- Advertisement -
Homeபொழுதுபோக்குஆகாயவெளியில் கட்டும் வெறும் மண் கோட்டை… அவரது கனவு நிச்சயம் பலிக்காது - தவெக...

ஆகாயவெளியில் கட்டும் வெறும் மண் கோட்டை… அவரது கனவு நிச்சயம் பலிக்காது – தவெக தலைவர் விஜய் குறித்து ஆவேசமாக பேசிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக இருந்து வருகிறார். நாளுக்கு நாள் அவரது அரசியல் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதீத கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நட்சத்திர மேடை பேச்சாளர் நாஞ்சித் சம்பத் போன்றோர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் சம்பவத்துக்கு பிறகு மீண்டும் முதல் முறையாக புதுச்சேரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விஜய் பேசினார். வழக்கம் போல திமுக பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து விஜய் பேசிய நிலையில் மற்ற அரசியல் கட்சியினர் விஜயை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வைகோ கூறியதாவது, திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டுகளாக நான் மதிமுகவை நடத்தி வருகிறேன். முல்லைப் பெரியாறு ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடி இருக்கிறேன்.

புதிதாக கட்சி தொடங்கிய விஜய் இதுபோன்ற பொது பிரச்சனைகளில் இதுவரை தலையிட்டாரா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டங்கள் நடத்தினாரா? தனிப்பட்ட முறையில் விஜயை நான் மிகவும் மதிக்கிறேன். யாரோடு கூட்டு சேர்ந்தாலும் விஜய் திமுகவை வீழ்த்தவே முடியாது.

- Advertisement -

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகும் ஆசை கனவு எல்லாம் எனக்கு என்றுமே கிடையாது. நான் ஒருபோதும் முதலமைச்சர் ஆவேன் என்று எங்குமே பேசியது இல்லை. திமுக – தவெக இடையே தான் போட்டி என சினிமாவில் பேசும் வசனங்களைப் போல மேடைகளில் விஜய் பேசி வருகிறார்.

விஜயின் தமிழக முதல்வர் கனவு ஒருபோதும் நனவாகாது. காகிதக் கப்பலில் கரையை கடக்க முயற்சிக்கிறார் விஜய். காகிதக் கப்பல் ஒருபோதும் கரை சேராது. ஆகாய வெளியில் மனக்கோட்டை கட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும். அவர் காணும் கனவு ஒரு நாளும் பலிக்காது என்று மதிமுக செயலாளர் வைகோ விஜய் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்