வனிதா விஜயகுமார் என்றால் தெரியாதவர்கள் கூட உண்டு ஆனால் பிக் பாஸ் வனிதா, வத்திக்குச்சி வனிதா என்றால் மக்களிடையே தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.அந்த அளவுக்கு அவருடைய செய்கையினால் பலரிடமும் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றவர்.
தன் தந்தையான நடிகர் விஜயகுமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனைத்து ஊடகங்களிலும் தரக்குறைவாக விமர்சித்தவர். இரண்டு திருமணங்களும் முடிவுக்கு வந்த நிலையில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அவருடனும் ஒத்துப் போகாத வகையில் விவாகரத்து செய்து கொண்டார்.
இப்போது தன் சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்துள்ளார். தன் பருவ வயதில் பிரபுதேவாவும் நக்மாவும் இணைந்து நடித்த காதலன் படத்தை பார்த்ததிலிருந்து பிரபுதேவா வை காதலிக்கவே ஆரம்பித்து விட்டாராம்.
அந்தத் திரைப்படத்தில் வரும் நக்மாவாக தன்னை நினைத்துக் கொண்டு பிரபுதேவா உடன் கனவில் டூயட் பாடுவாராம்.
மேலும் பத்திரிகைகளில் வரும் பிரபுதேவாவின் புகைப்படங்களை கத்தரித்து சேகரித்து வைத்து இருப்பாராம்.அவர் பிரபுதேவாவை நினைத்து பித்து பிடித்தது போல் இருப்பதை கண்ட அவருடைய தந்தை விஜயகுமார் இதை சரி செய்வதற்கு ஒரு முடிவு செய்தாராம்.
படத்தில் பார்ப்பது வேறு நிஜத்தில் வேறு என்பதை உணர்த்த பிரபுதேவாவை விருந்துக்கு வீட்டுக்கு அழைத்தாராம். வனிதாவோ பிரபுதேவா வீட்டுக்கு வருவதை நினைத்து மகிழ்ந்து போய் விதவிதமான உணவுகளை சமைத்து வைத்தாராம்.
ஆனால் பிரபு தேவாவோ தான் மாமிச உணவுகளை சாப்பிடுவதில்லை. முட்டை மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறினாராம். அன்றிலிருந்து வனிதாவும் முட்டை மட்டுமே சாப்பிடுவராக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி தாராம். பின்பு தான் அவருக்கு புரிந்ததாம் தான் நேசித்தது காதலன் படத்தில் வரும் ஷங்கர் உருவாக்கிய அந்த கேரக்டரை தான் பிரபுதேவாவை இல்லை என்று விருந்துக்கு வந்த பிரபுதேவா ரோஜாப்பூ ஒன்றை பரிசாகவும் கொடுத்திருக்கிறார். அதனை தற்போது வரை வனிதா பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம்.





