நடிகர் விஜய்க்கு ஜோடியாக “சந்திரலேகா” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் அதன் பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு தெரிய வெற்றி கிடைக்காத நிலையில் 2000-ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவர்களுக்கு விஜய் ஹரி, ஜோவிகா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தொழிலதிபரான ஆனந்த் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்தவர் தான் ஜெயனிதா பின்னர் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டாவது கணவரையும் வனிதா பிரிந்தார்.
இப்படி முதல் இரண்டு திருமணமும் நீடிக்காத நிலையில் மூன்றாவதாக கடந்த 2020-ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடனும் ஒரு சில மாதங்களே சேர்ந்திருந்த நிரையில் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். பின்னர் தற்போது தனது மகள் ஜோவிகா விஜயகுமாருடன் வசித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தற்போது திரையுலகில் மீண்டும் முழு நேரமாக தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அடுத்த அடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அதோடு தனக்கென ஒரு youtube சேனல் வைத்து அதன் மூலமும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த வனிதா விஜயகுமாரிடம் ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்விகளையும் எழுப்பினர். அதற்கு வனிதா பதிலும் அளித்திருந்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் : அடுத்த திருமணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அடுத்து கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்பது போன்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த வனிதா : “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று சிம்பிளாக கமல் டயலாக் மூலம் பதில் அளித்துள்ளார். அவர் அளித்த இந்த பதில் மூலம் அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டாரோ என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





