- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரியான ஆட்களை நான் சந்தித்தால்… எப்படி எஸ்கேப் ஆவேன் தெரியுமா? - இயக்குனர் சுந்தர்...

அந்த மாதிரியான ஆட்களை நான் சந்தித்தால்… எப்படி எஸ்கேப் ஆவேன் தெரியுமா? – இயக்குனர் சுந்தர் சி சொன்னதை கேட்டு வாய்பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சுந்தர் சி. கடந்தாண்டில் அவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த ஆண்டில் அவரது மதகஜ ராஜா படம் வெளியாகி ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்த படம் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட நிலையில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் வடிவேலு சுந்தர் சி யுடன் இணைந்து நடித்த படம் கேங்கர்ஸ். கடந்த சில வாரங்களுக்கு முன் வௌியான அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. வின்னர் படம் போல இந்த படத்தில் வடிவேலு காமெடி கேரக்டர் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.

- Advertisement -

இப்போது இயக்குனர் சுந்தர் சி வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். படத்துக்கு ஹிப்ஆப் ஆதி இசையமைக்கிறார். கன்னட நடிகர் துனியா விஜய் வில்லனாக நடிக்கிறார். ரெஜினா கசாண்ட்ராவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தின் நாயகனும் சுந்தர் சி தான்.

இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ள சுந்தர் சியை சிலர் நேரில் சந்தித்து கதை சொல்வது உண்டு. அல்லது அவர் ஹீரோவாக நடிக்க கதைகளும் கேட்பதும் உண்டு. சிலர் அவ்வாறு சந்திக்க வரும்போது அவர்களிடம் மணிக்கணக்கில் சிக்கிக்கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பாமல் புது டெக்னிக் ஒன்றை சுந்தர் சி பின்பற்றி வருகிறார். இதன்மூலம் அப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து எளிதில் தப்பித்து விடுவேன் என்று சுந்தர் சி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, சில பேர் என்னை மீட் பண்ண வேண்டும் என்று கேட்பார்கள். அவாய்டு பண்ணவே முடியாது. வந்தால் அறுத்து எடுப்பார்கள் என்று தெரியும். அப்போது என்ன செய்வேன் என்றால், வெளியில் இருக்கிற நம்ம ஆளு கிட்ட சொல்லிடுவேன். அவங்க வந்து என்கிட்ட பேசும் போது கரெக்டா 5வது நிமிஷம் கழிச்சு நீ எனக்கு போன் பண்றே. சார் வந்துட்டாங்க என்று மட்டும் நீ சொல்லணும்.

அதுக்கு அப்புறம் நான் பில்டப் பண்ணிக்குவேன். அய்யோ வந்துட்டாங்களா? சார் ரொம்ப அர்ஜெண்ட் சார், அவங்க வந்துட்டாங்க. இன்னொரு நாள் மீட் பண்ணி நாம இதை பத்தி பேசுவோம் என்று சொல்லி, அவர்களிடம் இருந்து எப்படியாவது எஸ்கேப் ஆகி விடுவேன். அவர்களும் என் அவசரத்தை தெரிந்துக்கொண்டு போய் விடுவார்கள் என்று இயக்குனர் சுந்தர் சி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்