- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பிரபு சாலமன் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது இந்த பிரபல நடிகையின் மகனா? போடு...

இயக்குனர் பிரபு சாலமன் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது இந்த பிரபல நடிகையின் மகனா? போடு வெடிய – ஆனா ஹீரோ பயப்படாம நடிப்பாரா?

- Advertisement -

இயக்குனர் பிரபு சாலமன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். தனது கதையை மட்டுமே நம்பி படம் எடுக்க கூடிய குறிப்பிட்ட சில இயக்குனர்களில் பிரபு சாலமனும் ஒருவர். இவர் பல படங்களில் தன்னை ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார்.

குறிப்பாக மைனா படத்தில், அருமையாக தனது படைப்பு திறமையை வெளிப்படுத்தி அந்த படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தவர் பிரபு சாலமன். அதே போல் கும்கி என்ற படத்தை இயக்கி அதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை தொட்டவர் டைரக்டர் பிரபு சாலமன். பிரபு சாலமனை பொறுத்தவரை நடிகர்கள் இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு, கதையை மட்டுமே நம்பி ஜெயிப்பது இவரது பலமாக இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக கும்கி படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்தி நல்ல ஒரு வெற்றி படத்தை அவருக்கு கொடுத்தார். இதுவரை விக்ரம் பிரபுவுக்கு நல்ல அடையாளமாக இருப்பது கும்கி படம் தான். ஏனெனில் அதற்கு பின் பல படங்களில் நடித்தும் கும்கி படம் போன்ற ஒரு முக்கிய அடையாளம் விக்ரம் பிரபுவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், பிரபல ஹீரோயின் மகன் ஒருவரை ஹீரோவாக்கி படம் எடுக்கிறார் பிரபு சாலமன்.

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவருடைய மகள் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் தற்போது உருவான டீன்ஸ் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணி புரிந்திருக்கிறார் வனிதாவின் மகள் ஜோவிகா.

- Advertisement -

நடிகை வனிதா விஜயகுமாருக்கு இதுவரை மூன்று திருமணம் நடந்துள்ளது. இதில் வனிதாவை முதலில் திருமணம் செய்தவர் நடிகர் ஆகாஷ். இவர் ஹரி இயக்கிய தாமிரபரணி, கோவில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷூக்கும், வனிதா விஜயகுமாருக்கும் பிறந்தவர் விஜய் ஸ்ரீ ஹரி. இவர் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஸ்ரீ ஹரி ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இந்த படத்தை நீண்ட நாட்களாக படங்கள் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்த ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் காஜா மொய்தீன் இந்த படத்தை தயாரிக்கிறார். கும்கி படத்தில் யானை போல, இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சிங்கம் நடிக்கிறது கூடுதல் சிறப்பு தகவல். அதனால் ஹீரோ பயப்படாமல் நடித்தால் சரிதான்.

- Advertisement -

சற்று முன்