தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் விஜய் நடித்த சந்திரலேகா உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நான் ராஜாவாக போறேன் அநீதி அந்தகன் போன்ற சில படங்களில் வனிதா விஜயகுமார் நடித்திருக்கிறார்.
இதுவரை 3 திருமணங்களை செய்து தனது கணவர்களை விவாகரத்து செய்துள்ள நடிகை வனிதா விஜயகுமார், சமீபத்தில் 4வது திருமணத்துக்கும் நான் ரெடிதான் என்று சொன்னதாக இணையத்தில் தகவல் பரவி வைரலானது. ஏனெனில் வனிதா விஜயகுமாருக்கு திருமணம் செய்ய வேண்டி வயதில் ஜோவிகா என்ற மகள் இருக்கிறார்.
விஜய் டிவியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதுவரை பிக்பாஸ் சீசன்கள் 8 வரை நடந்துள்ள நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிக்பாஸ் சீசனில் வனிதா விஜயகுமார் பங்கேற்றார். அடுத்து சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது மகள் ஜோவிகாவும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஆனால் இருவருமே டைட்டில் வின்னர் ஆகவில்லை.
இப்போது ஜோவிகா திரைப்பட தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். ஜோவிகாவின் சொந்த தயாரிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை கதை எழுதி இயக்கியவர் வனிதா விஜயகுமார்தான். மேலும் இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்த வனிதா விஜயகுமாரே கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். வரும் 4ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, என்னுடைய மகள் ஜோவிகா எனக்கு எப்போதும் அட்வைஸ் செய்துக்கொண்டே இருப்பார். என் மகள் காதலிப்பாரா என்பதில் என்னுடைய கருத்து சரியாக இருக்காது.
ஆனால் என்னுடைய வாழ்க்கையின் மூலமாக காதல், அதனால் ஏற்படும் வலிகள் குறித்து அவர் கற்றுக்கொண்டு இருக்கிறார். அதனால் என் மகள் ஜோவிகா காதல் செய்ய மாட்டார் என்றே நான் கருதுகிறேன். காதல் விஷயத்தில் என் மகள் மிகவும் கவனமுடன் இருப்பார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது என, நடிகை வனிதா விஜயகுமார் தன் மகள் ஜோவிகா குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





