- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் குற்றவாளிகளுக்கு அந்த தண்டனை வழங்க வேண்டும் - நடிகை வரலட்சுமி...

பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் குற்றவாளிகளுக்கு அந்த தண்டனை வழங்க வேண்டும் – நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆவேசம்!

- Advertisement -

சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் சாயாதேவி தம்பதியின் மகள் வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் என்பவரை கடந்தாண்டில் திருமணம் செய்து கொண்டார். இப்போதும் படங்களில் நடிகை வரலட்சுமி நடித்து வருகிறார். சண்டக்கோழி 2 மதகத ராஜா சர்கார் கன்னிராசி உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இப்போது அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கிய தி வெர்டிக்ட் என்ற படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஸ்ருதி ஹரிஹரன் சுகாசினி வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஒரு கொலை நடக்கிறது. அதை புலனாய்வு செய்யும் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

தி வெர்டிக்ட் திரபை்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாரானது குறிப்பிடத்தக்கது. ஆதித்யராஜ் என்பவர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற 30ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் திரையரங்கில் நடந்தது.

- Advertisement -

இந்த விழாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியதாவது, முதலில் என்னை ஹாலிவுட் திரையுலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குனருக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை. நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சிகளில் நடித்தது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் தண்டனை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறுகையில், சாதாரண ஒரு குற்றத்திற்கு கை கால் எடுக்கிறார்கள். பாலியல் தொடர்பான குற்றங்கள் செய்பவர்களின் அந்த உறுப்பை அறுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் உயிருடன் வாழ வேண்டும். அப்போதுதான் அந்த தண்டனையை அவர்களால் உணர முடியும் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்