- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கிய வீர தீர சூரன் - யதார்த்தம் மசாலா ரெண்டும் சேர்ந்த...

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கிய வீர தீர சூரன் – யதார்த்தம் மசாலா ரெண்டும் சேர்ந்த கலவையில் விக்ரம் ஜெயித்தாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மிக முக்கியமான நடிகர் சியான் விக்ரம். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படம் எதிர்பார்த்த வெற்றியை வரவேற்பை பெறாத நிலையில் வீரதீர சூரன் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் இருந்தது.

ஆனால் நேற்று காலை வெளியாவதாக இருந்த இந்த படம் டெல்லி ஐ கோர்ட் விதித்த தடையால், மாலையில்தான் வெளியானது. இதனால் காலை மதியம் காட்சிகள் ரிலீஸாகாமல் மாலை காட்சிதான் ரிலீஸானது. ஆனால் இந்த படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

- Advertisement -

சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இந்த படத்தை பெரிய சம்பவமாக செய்திருப்பார் என்று நினைத்த ரசிகர்களுக்கு இந்த படம் சாதாரண சம்பவமாக கூட பல இடங்களில் தெரியவில்லை. தூள் படத்தில் வரும் சிங்கம் போல பாட்டும் இந்த படத்தில் கடைசியில் வருகிறது. ஆனால் ரசிகர்கள் நினைத்த மாதிரி தீப்பொறி பறக்கும் காட்சிதான் இல்லை.

ஒரு ராத்திரியில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மையக்கரு என்றால் அதற்கேற்ப படத்தின் கதை திரைக்கதை காட்சியமைப்புகள் சுவாரசியம் விறுவிறுப்பு என ரசிகர்களை தூண்டிவிட வேண்டும். அந்த சீன் எப்போ அடுத்த சீன் எப்போ ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை தூண்ட வேண்டும். ஆனால் படத்தின் காட்சிகள் யதார்த்தம் மசாலா ரெண்டும் கலந்த விதத்தில் ரசிகர்களுக்கு கொட்டாவியை வரவழைக்க செய்கிறது.

- Advertisement -

இந்த படத்தின் நாயகி துஷாரா விஜயன் இளமையான மங்கையாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஜீவி பிரகாஷ்குமாரும் இசையில் தன் பங்களிப்பை மிக சிறப்பாக செய்து ரசிகர்களை திருப்தி செய்திருக்கிறார். ஆனால் வில்லன் நடிகர் எஸ்ஜே சூர்யா பல இடங்களில் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சாப்பிடும் காட்சிகளை இயக்குனர் அதிகம் தந்தது ஏன் எனத் தெரியவில்லை.

மொத்தத்தில் வீர தீர சூரன் படம் தூள் தில் சாமி போன்ற விக்ரமின் படங்களை போல ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஒருமுறை பார்க்கலாம். அதுவும் விக்ரமின் அசத்தலான நடிப்புக்காக மட்டுமே என்றும் சொல்லும் அளவுக்கு இருக்கிறது. நல்ல நடிகன் கிடைத்தால் அவரை எப்படி பயன்படுத்தி படத்தை தரமாக்க வேண்டும் என்ற வித்தை, அருண்குமார் போன்ற அனுபவசாலி இயக்குனர்களுக்கும் சில நேரங்களில் சொதப்பி விடுவதுதான் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமாகி விடுகிறது.

- Advertisement -

சற்று முன்