- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதி குணசேகரனாக மாறிய வேலா ராமமூர்த்தி, எதிர்நீச்சல் கேரக்டரில் அவர் மூழ்கி முத்தெடுத்தாரா இல்லையா -...

ஆதி குணசேகரனாக மாறிய வேலா ராமமூர்த்தி, எதிர்நீச்சல் கேரக்டரில் அவர் மூழ்கி முத்தெடுத்தாரா இல்லையா – டிஆர்பி ரேட்டிங்கில் என்னாச்சு தெரியுமா

- Advertisement -

சன் டிவியில், பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற தொடர் எதிர்நீச்சல். இதில், ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்தவர் மாரிமுத்து. சினிமாவில் ஏற்கனவே அவர் பல படங்களில் நடித்த அனுபவத்தாலும், தேனி வட்டார மொழியில் இயல்பாக பேசுபவராகவும் மாரிமுத்து இருந்ததால், ஆதி குணசேகரன் கேரக்டரை, நிஜத்தில் சின்னத்திரையில் வாழ வைத்தார் என்பதே உண்மை.

எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம், ஆதி குணசேகரன் கேரக்டரை எந்தளவுக்கு நினைத்து உருவாக்கினாரோ, அதைவிட பலமடங்கு அந்த கேரக்டரை தனது இயல்பான நடிப்பால், பேச்சால் வலிமையாக்கினார் மாரிமுத்து. அதனால், அந்த கேரக்டரை பார்க்கவே பலரும் சீரியலை தினமும் விரும்பி பார்த்தனர். அதனால், டிஆர்பி ரேட்டிங் எப்போதும் முக்கிய இடத்தை இந்த சீரியல் பிடித்தது.

- Advertisement -

வாரத்தில் ஏழு நாட்களும் சன்டிவியில் எதிர்நீச்சல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த மாதத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரிமுத்து காலமானார். இதையடுத்து, எதிர்நீச்சல் கேரக்டரில் அடுத்து யார் நடிப்பார்கள் என்ற கேள்வியே பலருக்கும் எழுந்தது. அவரது ஏம்மா ஏய் என்ற அந்த டயலாக், நிச்சயமாக யாராலும் பேச முடியாத, ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது.

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக, நடிகர் வேலா ராமமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடந்த ஒரு வாரமாக நடித்து வருகிறார். நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரனாக நடித்த போது, டிஆர்பி ரேட்டிங், 10 புள்ளிகளுக்கு மேல் வழக்கமாகவே இருக்கும். இந்த சீரியலே முதலிடத்திலும் இருந்தது.

- Advertisement -

இப்போது அவரது மறைவுக்கு பின், ஆதி குணசேகரனாக வேலா ராமமூர்த்தி நடித்துவரும் நிலையில், இந்த வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் 11.54 புள்ளியாக உயர்ந்துள்ளது. ஆனால், மாரிமுத்து நடிப்பில் இருந்த கோபம், முறைப்பு வேலா ராமமூர்த்தியிடம் இருந்தாலும், அவரது பேச்சில், உடல் மொழியில் இருக்கும் ஒரு கேலி, கிண்டல், நக்கல் போன்றவை, வேலா ராமமூர்த்தியிடம் இல்லை என்பது ரசிகர்களின் குறையாக உள்ளது. அந்த கேரக்டரில் நடிப்பது யார் என அறியவும் பலர், இந்த வாரத்தில் அதிகம் பேர் எதிர்நீச்சல் சீரியலை பார்த்துள்ளனர்.

வழக்கமாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டால், டிஆர்பி ரேட்டிங் அந்த நிகழ்ச்சிக்கு அதிகரிக்கும். ஆனால், இந்தமுறை 4.17 புள்ளிகள் மட்டுமே பிக்பாஸ் சீசன் 7க்கு, இந்த வார ரேட்டிங் ஆக உள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் இரவு 9.30 மணிக்கு என்பதால், எதிர்நீச்சல் சீரியலை, சன்டிவி 9 மணிக்கு மாற்றியது. எனினும், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரேட்டிங் மிக குறைந்தும், எதிர்நீச்சலுக்கு அதிகமாகவும் கிடைத்திருக்கிறது. வேலா ராமமூர்த்தி ஆதிகுணசேகரனாக எந்த அளவுக்கு நடிக்கிறார் என்பதை, வரும் வாரங்களில் ரேட்டிங் இன்னும் உறுதிப்படுத்தி விடும்.

- Advertisement -

சற்று முன்