- Advertisement -
Homeபொழுதுபோக்குவேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு... ஒன்றல்ல, இரண்டல்ல... 10 திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரிக்க இருக்கிறார்களா... அதற்கான...

வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு… ஒன்றல்ல, இரண்டல்ல… 10 திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரிக்க இருக்கிறார்களா… அதற்கான இயக்குனர்கள் லிஸ்ட் இதோ…

- Advertisement -

கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சி இருக்கும் ஐசரி கணேஷ், தனது வேல்ஸ் நிறுவனம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. ரவி மோகன் நடித்த கோமாளி திரைப்படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ்தான் தயாரிக்கப்பட்டது.

பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமான அந்த திரைப்படம், வெற்றி மேல் வெற்றி குவித்து சாதனை படைத்தது. இதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் ஐசரி கணேஷ்தான் தயாரித்திருந்தார். கேங்ஸ்டர் பாங்கில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வெற்றியை ருசித்தது.

தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் ஐசரி கணேஷ். இதற்காக தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான செட் அமைத்துள்ளார். முந்தைய பாக்கத்தில் அம்மனாக நடித்த நயன்தாராவே, இதிலும் நடிக்கிறார். ஆனால் ஆர் ஜே பாலாஜிக்கு பதில் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் சுந்தர் சி.

இதற்கான சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தனுஷ் ரஜினி அஜித் உள்ளிட்டோருடன் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கை கோர்க்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படியான சூழலில் அந்த நிறுவனத்திலிருந்து யாருமே எதிர்பார்க்காத வகையில் வேறு ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடப்பாண்டு முதல் 2027 வரை பத்து திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோக்களின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், இயக்குனர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், டாடா திரைப்படத்தை இயக்கிய கணேஷ் பாபு, கட்டா குஸ்தி திரைப்படத்தை எடுத்த செல்ல அய்யாவு, போர் தொழில் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த விக்னேஷ் ராஜா, அருண் ராஜா காமராஜ், மலையாள இயக்குனர் ஜூடே ஆண்டனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல், 96 பிரேம்குமார், மாரி செல்வராஜ், கௌதம் மேனன், வெற்றிமாறன், சுந்தர் சி ஆகியோரும் வேல்ஸ் நிறுவனத்தின் கீழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விக்னேஷ் கே ராஜா மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் தனுசுடன் பணிபுரிய இருப்பது உறுதியாகி இருக்கிறது. மற்ற இயக்குனர்கள் யார் யாரை வைத்து படத்தை இயக்கப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

சற்று முன்