நேபாளத்தில் பனிமலை உடைந்து பெரிய நீர்நிலையில் விழுந்ததால் ஆறுகள் பெருக்கெடுத்து காட்டுவெள்ளமாக மாறி அந்த நாட்டின் பல பகுதிகளை அழித்து விட்டது. இதில் ஏராளமான வீடுகள் குடியிருப்புகள் கட்டிடங்கள் தொழிற்சாலைகள் வாகனங்கள் என எல்லாமே சேதமடைந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மக்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
சில தினங்களாக நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளும் காட்டு வெள்ளம் ஏற்பட்ட போது அங்கு சிக்கிய பொதுமக்களும் கட்டிடங்களும் அலறியடித்து ஓடும் மக்கள் கூட்டமும் வீடியோக்களாக வெளியாகி பதைபதைக்க வைக்கிறது. இதில் கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து நேபாளம் வழியாக கைலாஷ் சென்ற 100க்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன் கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சென்ற 77 பேர் கொண்ட யாத்திரீகர் குழுவும் காணவில்லை. அவர்களை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை என்று ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தமிழக மக்கள் எத்தனை பேர் அங்கு வெள்ளத்தில் சிக்கி மாயமானார்கள் என்பதே புதிராக இருந்து வருகிறது.
இதுபோன்ற பேரிடர் காலங்களில் இயற்கை சீற்றங்களில் தமிழக மக்கள் சிக்கிக் கொண்டாலோ அல்லது ஆபத்தான சூழல்களில் அவர்கள் இருந்தாலோ அவர்களை தொடர்பு கொள்ளவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்களை பத்திரமாக மீட்டு வரவும் தமிழக அரசுக்கும் டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கும் பாலமாக செயல்பட தான் தமிழக அரசின் டில்லி பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் தமிழக மக்களை காப்பாற்றவும் மீட்கவும் தேவையான உதவிகளை செய்யவும் தான் அவர் டில்லியில் சிறப்பு பிரதிநிதியாக முக்கிய பொறுப்பில் பதவியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் இப்போது அவர் தனது தயாரிப்பில் உருவான டாக்ஸிக் படம் குறித்த பிரமோசன்களில் பங்கேற்று அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதாவது டாக்ஸிக் படத்தை அவரும் நடிகர் யஷ்சும் இணைந்து தயாரித்துள்ள நிலையில் அந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் நடிகைகளுடன் பங்கேற்று பேசி வரும் வெங்கட் கே நாராயணா, நேபாளம் சம்பவம் குறித்தோ அதில் சிக்கியுள்ள தமிழக பக்தர்கள் குறித்தோ கவலைப்படாமல் சினிமா தயாரிப்பிலும் அவர் தயாரித்த படத்தின் பிரமோசனிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு சினிமா தயாரிப்பாளரை முக்கிய பொறுப்பில் நியமித்த முதல்வர் விஜயை தமிழக மக்கள் கண்டபடி விமர்சித்து திட்டி வருகின்றனர்.





