- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படம் குறித்து லீக் ஆன லேட்டஸ்ட் அப்டேட் - அப்செட் ஆன டைரக்டர்...

விஜய் படம் குறித்து லீக் ஆன லேட்டஸ்ட் அப்டேட் – அப்செட் ஆன டைரக்டர் வெங்கட்பிரபு – வண்டியை நேரா ரஷ்யாவுக்கே விடுங்கப்பா

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு காட்சிகளே மீதமுள்ள நிலையில், விறுவிறுப்பாக, மிக சுறுசுறுப்பாக இறுதி கட்ட பணிகளை இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினர் செய்து வருகின்றனர். அடுத்து, ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டைம் டிராவல் கதையான இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சினேகா அப்பாவுக்கும், மீனாட்சி சவுத்ரி மகனுக்கும் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் தவிர ரம்யா கிருஷ்ணன், கனிகா, லைனா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், யோகி பாபு, விடிவி கணேஷ், கஞ்சா கருப்பு, சுதீப், அஜ்மல், வைபவ் என ஒரு நட்சத்திர கூட்டமே படத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தை பொருத்த வரை விஜய் ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் ஏமாற்றத்தை தராத, முழுமையான திருப்தியை தரக்கூடிய படமாக இருக்க வேண்டும். விஜயின் அக்மார்க் விஷயங்கள் இதில் இடம்பெற செய்ய வேண்டும். குறிப்பான நடனம், பாடல்கள், சண்டை காட்சிகளில் எந்தவிதமான தவறும் வந்து விடக்கூடாது என்பதால் வெங்கட்பிரபு அதிகளவில் மெனக்கெட்டு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

ரஷ்யாவில் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு சென்னை, ஐதராபாத் பகுதிகளில் சில காட்சிகளை எடுத்துவிட வெங்கட்பிரபு முடிவு செய்திருந்த நிலையில், இப்போது அங்கு படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் திடீரென வெங்கட்பிரபு, தனது இரண்டு உதவியாளர்களுடன் கேரளா சென்றுள்ளார். கேரளாவுக்கு ரகசிய விசிட் செய்த வெங்கட்பிரபு சில காட்சிகளை அங்கு படமாக்க திட்டமிட்டு, லொக்கேஷன்களை பார்த்துவிட்டு திரும்பியுள்ளார்.

- Advertisement -

ஆனால் இந்த விஷயம் எப்படியோ வெளியே கசிந்து விட்டது. விஜய்க்கு தமிழ்நாட்டில் எப்படி வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே போல் கேரளாவிலும் ரசிகர்கள் மிக அதிகம். இப்போதுள்ள சூழலில், கேரளாவில் விஜயை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது சிக்கல் என்பதால், அங்கு படப்பிடிப்பு நடத்தும் திட்டத்தை கைவிட்டு விட்டார்.

கேரளாவில் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த லொக்கேஷன் பார்த்து விட்டு வந்தும் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதால், வெங்கட்பிரபு பயங்கர அப்செட்டில் இருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு மூவ்மென்ட் எப்படியே வெளியே கசிகிறது என்று தெரியாமல், உதவி இயக்குநர்களையும் திட்டியுள்ளார். கேரளா வேண்டாம், நேரா இனி ரஷ்யாவுக்கே போய்விட்டலாம் என்று இறுதியான முடிவுக்கு கடைசியில் வந்திருக்கிறார் கோட் பட இயக்குநர் வெங்கட்பிரபு.

- Advertisement -

சற்று முன்