- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி இயக்குனரை கைவிட்ட நடிகர் அஜீத்குமார் - கடைசியில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய பான்...

விடாமுயற்சி இயக்குனரை கைவிட்ட நடிகர் அஜீத்குமார் – கடைசியில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய பான் இந்தியா படமும் இப்படி ஆகி விட்டதே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் 2025ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியானது. பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் அஜீத்குமார் திரிஷா அர்ஜூன் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

குறிப்பாக இந்த படத்தில் நடிகர் அஜீத்குமார் ஹீரோயிசம் காட்டாமல் படம் முழுவதும் வில்லன்களிடம் அடிவாங்கும் காட்சிகளாக இருந்தன. இது அஜீத்குமார் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் படத்தின் கதைக்களம் வசனங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு வித்யாசமாக மனதில் ஒட்டாமல் போனதும் இந்த படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

- Advertisement -

எப்போதுமே நடிகர் அஜீத்குமார் ஒரு இயக்குனரிடம் கதை கேட்டால் 3 கதைகளை கேட்பார். தொடர்ந்து அந்த 3 படங்களிலும் அவர் நடிப்பார். ஆனால் அவர் நடிக்கும் முதல் படம் பெரிய வெற்றியை பெற வேண்டும். இயக்குனர் மகிழ் திருமேனியும் அஜீத்குமாரிடம் விடாமுயற்சி படத்தின் கதையை சொன்னபோது 3 கதைகளை சொல்லியிருக்கிறார்.

ஆனால் விடாமுயற்சி படம் படுதோல்வி அடைந்ததால் அடுத்தடுத்த படங்களை இயக்க அஜீத்குமார் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு தரவில்லை. இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தை வெற்றிப் படமாக கொடுத்ததால் தனது 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க அஜீத்குமார் அனுமதி தந்துவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை இந்தியில் டைரக்ட் செய்ய முடிவானது. அவரிடம் கதை கேட்ட விஜய் சேதுபதியும் கதை பிடித்துவிட்டதாக கூறி கால்ஷீட்டும் தர சம்மதித்து விட்டார். இது ஒரு பான் இந்தியா படமாக பெரிய பொருட்செலவில் உருவாக திட்டமிடப்பட்டது.

இந்த படத்தில் அமிதாப் பச்சன் போன்ற நட்சத்திர நடிகர்களும் நடிக்க வைக்க திட்டம் இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பு செலவு, நடிகர் நடிகைகள் சம்பளம் தொழில்நுட்ப செலவுகள் படப்பிடிப்பு செலவுகள் என எல்லாம் கணக்கிட்டு பார்த்த போது படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிறிப் போயுள்ளது. இதனால் அதிர்ந்து போன தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தையே டிராப் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மகிழ் திருமேனி கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்