- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்டார்ட் கேமரா ஆக்சன் இல்லை… மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது - இயக்குனர் வெங்கட்பிரபு...

ஸ்டார்ட் கேமரா ஆக்சன் இல்லை… மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது – இயக்குனர் வெங்கட்பிரபு நெகிழ்ச்சி!

- Advertisement -

நடிகர் அஜீத் குமார் கடந்த ஒரு மாதமாக துபாயில் நடந்து வரும் கார் ரேஸ்களில் ஆர்வமாக பங்கேற்று வருகிறார். அவ்வப்போது அவர் பங்கேற்கும் கார் பந்தய படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், தன்னை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இங்கு வருகின்றனர்.

அவர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வம் என் மீது காட்டும் அக்கறையை பார்க்கும் போது நான் இந்த பந்தயங்களில் இன்னும் ஆர்வம் காட்டுகிறேன். கார் ரேஸில் நல்ல ஓட்டுனராக நீண்ட காலம் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்கிற தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

துபாயில் கார் ரேஸில் இருந்து வரும் நடிகர் அஜீத்குமாரை சிலம்பரசன் அனிருத் மாதவன் நயன்தாரா விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் என பலரும் நேரில் சென்று பார்த்து பாராட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் நடிகர் சிவகார்த்திகேயன் துபாய்க்கு நேரில் சென்று நடிகர் அஜீத் குமாரை சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அஜீத்குமாரின் உழைப்பு திறமை பார்த்து வியந்து போனதாக எஸ்கே தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் எப்போதும் என் முன்மாதிரி ஏகே என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் அஜீத்குமாரை துபாய்க்கு நேரில் சென்று அவரை சந்தித்திருக்கிறார். அஜீத்குமார் நடித்த 50வது படம் மங்காத்தாவை இயக்கியது வெங்கட்பிரபு தான். சமீபத்தில்தான் அந்த படம் ரி ரிலீஸாகி வசூலில் சக்கைப் போடு போட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜீத்குமாரை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது, ரீடேக் இல்லை. ஸ்டண்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட் கேமரா ஆக்சன் இல்லை. உண்மையான வேகம். அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மையில் மெய்சிலிர்க்கும் அனுபவம். அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை. இதுதான் அஜித்குமார் என்று வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்