நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். தி கோட் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக நீண்ட ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். அதே போல், 1980களில் முன்னணி நடிகராக, வெள்ளிவிழா நாயகனாக இருந்த மைக் மோகன் இந்த படத்தில் நடித்துள்ளார். அதுவும் இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் இந்த படத்தில் 3 ரோல்களில் நடித்திருக்கிறார். நடிகர்கள் விஜயகாந்த், விவேக் ஆகியோர் மறைந்த பிறகு, அவர்களை ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தில் வெங்கட்பிரபு நடிக்கச் செய்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வருகிறார். மேலும் சினேகா, லைலா, ரம்யா கிருஷ்ணன், மீனாட்சி சௌத்ரி, கனிகா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியான நிலையில், 3வது பாடல் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இது நடிகை மற்றும் பாடகியும், நடிகர் கமல் மகளுமான ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.தி கோட் படத்தில் மற்றொரு முக்கிய விஷயமாக, இதுவரை எந்த படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடாத குந்தவை திரிஷா, இந்த படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில், தி கோட் படத்தின் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த புதிய கீதை படத்துக்கு பிறகு 2வது படமாக தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கீதை படத்துக்கு பிறகு, 2வது முறையாக விஜய் நடித்துள்ள இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார்.
இந்நிலையில் தி கோட் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, புதிய பதிவு ஒன்றை தன்னுடைய வலைதள பக்கத்தில் செய்துள்ளார். இசைக்கூடத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, மந்திரவாதி தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார் என்று பதிவிட்டுள்ளார். அதாவது தி கோட் படத்தின் பின்னணி இசை பணியை யுவன்சங்கர் ராஜா துவங்கியிருப்பதை, வெங்கட்பிரபு அறிவித்துள்ளார். இதுவரை 2 பாடல்கள் ஏமாற்றிய நிலையில், பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா கலக்குவாரா, என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.





