இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு உச்ச நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளனர். இது தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடித்த பல படங்கள் 1970 இறுதிகளிலும் 1980களிலும் வந்திருக்கின்றன. 16 வயதினிலே அபூர்வாக ராகங்கள் நினைத்தாலே இனிக்கும் மூன்று முடிச்சு அலாவுதீனும் அற்புத விளக்கும் தில்லு முல்லு போன்ற பல படங்களில் அவர்கள் இணைந்து நடித்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிப்பது பெரிய ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியிருக்கிறது. இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்த படத்தை முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அது நெல்சன் திலீப்குமார் கைக்கு மாறி விட்டது.
இந்த படத்தில் ரஜினி கமலுக்கு ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகள் தேர்வு வேகமாக நடந்து வருகிறது. இதில் ரஜினி கமல் இருவரில் ஒருவருக்கு நாயகியாக ஜோடி சேருவதில் நடிகை மீனா ஆர்வமாக உள்ளார். அதேபோல் இயக்குனர் நெல்சன், இந்த படத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.
ஏற்கனவே ரஜினியுடன் முத்து வீரா படங்களில் மீனா நடித்தவர். அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் நடித்திருக்கிறார். நயன்தாரா ரஜினியுடன் அண்ணாத்த தர்பார் போன்ற படங்களில் நடித்தவர் என்பதால் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா, கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் கமல் நயன்தாரா இதுவரை இணைந்து நடித்தது இல்லை. ஒருவேளை அதற்காகவே கமல் நயன்தாரா ஜோடி சேரவும் இந்த படத்தில் வாய்ப்புள்ளது.
நடிகர் கமலின் மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். தனது அப்பாவும் ரஜினியும் இணைந்து நடிக்கும் படத்தில் தானும் நடிக்க விரும்புகிறார். அத்துடன் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் நடிகைகள் இல்லை என்பதால் இந்த படத்தில் டைரக்சன் நிர்வாகம் கேமரா சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





