கோட் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ளன. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். படத்திலிருந்து தற்போது வரை நான்கு பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதில் இறுதியாக வெளியான மட்ட பாடல் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தின் டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தந்தை மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜயை காட்டுவதற்காக டி ஏஜிங் முறையை பட குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதில் டிஏஜிங் முறையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் இடம் பெற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இந்த திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு பல்வேறு தகவல்களை அளித்து வருகிறார். நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் படத்தில் இருக்காது. அடுத்து என்ன சீன் வருகிறது என்று உங்களால் யூகிக்கவே முடியாது. ட்ரெய்லரிலேயே நாங்கள் சில விஷயங்களை கூறியிருந்தோம். ஆனால் அதனை ரசிகர்கள் யாரும் சரியாக டி கோடிங் செய்யவில்லை.
மங்காத்தா திரைப்படத்தில் ஒரு விஷயத்தை செய்யும் போது அதில் அனைவரையுமே கெட்டவர்களாக நான் காட்டி இருப்பேன். ஆனால் இதில் அப்படி இல்லை. ஒரு குடும்பத்தை சுற்றி இருக்கும் நபருக்கு பின்னால் நடக்கும் விஷயம்தான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த படத்திற்கு முதலில் காந்தி என்று தான் டைட்டில் வைப்பதாக இருந்தது.
பிறகு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பரிந்துரையின் பெயரில் கோட் என மாற்றப்பட்டது. இந்த திரைப்படத்தில் அஜித் ரெபரன்ஸ் இருக்கலாம். ஒரு போன் கால் ஆகவோ, அல்லது ஒரு போட்டோவிலோ காட்டியிருக்கலாம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் மங்காத்தா திரைப்படத்தில் காவலன் திரைப்படத்தின் பாடல் வந்திருக்கும். அதேபோன்றுதான் இதுவும். அதுமட்டுமல்ல அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் விஜய்க்கான ஒரு ரெஃபரன்ஸ் இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.





