- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் சாருக்கு உடல்நிலை சரியில்லை என்று விஜய்யிடம் கூறினேன்... உடனே அவர் இப்படி செய்வார் என்று...

அஜித் சாருக்கு உடல்நிலை சரியில்லை என்று விஜய்யிடம் கூறினேன்… உடனே அவர் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை… எதிர்பார்ப்பை தூண்ட வைத்த வெங்கட் பிரபுவின் பேச்சு…

- Advertisement -

நடப்பாண்டு ரசிகர்கள் மனதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. இதில் கடந்த மாதம் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை எல்லாம் சுக்குநூறாக உடைத்தது. இப்போது அந்த திரைப்படத்தை ட்ரோல் மெட்டீரியலாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இணையத்தைத் திறந்தாலே இந்தியன் 2 திரைப்படத்தின் ஏதாவது ஒரு கிண்டல் செய்யப்பட்ட காட்சி கண்ணில் பட்டு விடுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருக்கும் தங்கலான் வெளியாகிறது. இதுபோக டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ரகு தாத்தா ஆகிய படங்களும் வெளியாகின்றன.

- Advertisement -

அடுத்த மாதம் ஒட்டு மொத்த இந்திய திரை உலகமும் எதிர்பார்க்கும் விஜயின் கோட் திரைப்படம் வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

படத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பது பலருக்கும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதில் ஒரு விஜயை மிகவும் இளமையான வயதில் காட்டுவதற்காக, ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக விஜய் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் கலிபோர்னியாவுக்கு சென்று வந்தனர்.

- Advertisement -

இருப்பினும் சமீபத்தில் வெளியான ஸ்பார்க் பாடலில் சி ஜி செய்யப்பட்ட இளம் வயது விஜயின் தோற்றம் பார்த்து அவரது ரசிகர்களை நொந்து போனார்கள். இதற்காகவா வெளிநாட்டுக்கு எல்லாம் சென்றீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும் படத்தின் மீது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் கோட் படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

அது மட்டுமல்லாமல் அஜித் – விஜய் நட்பு குறித்தும் அவர் பேசியுள்ளார். “மங்காத்தா படத்தின் சூட்டிங் பணியின் போது அஜித் சார் என்னிடம், நீ கண்டிப்பாக விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும். அது நன்றாக வரும் என்று கூறியிருந்தார். அண்மையில் விஜய் சாரை சந்தித்தபோது, அஜித் சாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை நேரில் சந்தித்த தகவலையும் கூறி இருந்தேன். உடனடியாக அவர் என்னை அஜித் சாருக்கு போன் செய்ய சொல்லி விட்டார். இருவரும் மிக மகிழ்ச்சியுடன் பேசினார்கள். அவர்கள் நல்ல நண்பர்கள். இந்தப் படம் மங்காத்தாவை விட 100 மடங்கு இருக்க வேண்டும் என்று படத்தின் ஆரம்பத்திலேயே அஜித் சார் என்னிடம் கூறியிருந்தார்” இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்