- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று 50ல் ஜெயித்துக்காட்டிய அஜீத்குமார், விஜய் சேதுபதி வரிசையில் தனுஷ்…. ஆனால் 50ல் இத்தனை பேர்...

இன்று 50ல் ஜெயித்துக்காட்டிய அஜீத்குமார், விஜய் சேதுபதி வரிசையில் தனுஷ்…. ஆனால் 50ல் இத்தனை பேர் பல்பு வாங்கியது இதுவரைக்கும் தெரியாம போச்சே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்களாக வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அப்பா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், அக்கா என சினிமா துறை சார்ந்தவர்களாக இருந்தால் சினிமாவுக்குள் எளிதாக வந்துவிடலாம். ஆனால் படங்களில் தொடர்ந்து வெற்றியை கொடுத்தால் மட்டுமே சினிமாடில் நிலைத்து நிற்க முடியும். இல்லை என்றால் பெரிய ஹீரோ மகனாக இருந்தாலும், விரைவில் கோ பேக் என்று ரசிகர்கள் சொல்லாமல் சொல்லி விடுவர்.

உதாரணமாக அதர்வா, கெளதம் கார்த்திக், விக்ரம் பிரபு, நகுல், ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், சண்முக பாண்டியன், சிபிராஜ் என நடிகர்களின் வாரிசுகளாக இருந்தாலும் அவர்களால் வெற்றி படங்களை கொடுத்தால் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பை ஆதரவை பெற முடியும். இல்லை என்றால் தாக்குப் பிடிப்பது கடினம் என்பதை இவர்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

- Advertisement -

அதே நேரத்தில் வாரிசுகளாக வந்து பெரிய அளவில் ஜெயித்த நடிகர், நடிகைகளும் இருக்கவே செய்கின்றனர். உதாரணமாக விஜய், பிரபு, கார்த்திக், முரளி, சிலம்பரசன், தனுஷ் போன்றவர்களை சொல்லலாம். ஆனால் அந்த காலத்தில் ஒரு நடிகர் 100 படங்களை கடந்து நடிப்பது வெகு சுலபமாக நடந்தது. அடிக்கடி அவர்களது படங்கள் ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகளில் 100 படங்கள் சாதனையை தொட்டனர்.

ஆனால் இன்று பல நடிகர்கள் 25வது படத்தை கடப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது. அதுவும் 50வது படம் கடப்பதும் பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் 50வது படத்தை வெற்றிப் படமாக கொடுப்பது என்பதே பெரிய அளவில் போராட்டமாக மாறுகிறது. ஏனெனில் இன்றைய சூழலில் தொடர்ந்து திரைத்துறையில் வெற்றி வாகை சூடுவது என்பது பெரிய விஷயமாகி விட்டது. இன்றுள்ள பல இயக்குனர்கள் ஜெராக்ஸ் காபி எடுப்பவர்களாக படங்களை காப்பியடித்தே படங்களை எடுத்து ரசிகர்களை ஏமாற்றுகின்றனர்.

- Advertisement -

இந்த 50வது படம் சாதனையில் பல பெரிய நடிகர்கள் உட்பட பலரும் தோல்வியை சந்தித்தவர்களாக உள்ளனர். தமிழ் சினிமாவை ஆட்சி செய்த ஜாம்பவான்கள் எம்ஜிஆர், சிவாஜி கூட இதற்கு தப்பவில்லை. ரஜினி, கமல் கூட 100வது படங்களில் பல்பு வாங்கியுள்ளனர். கடந்த 1961ம் ஆண்டில் எம்ஜிஆர் நடித்த நல்லவன் வாழ்வான் படம் பிளாப் ஆகியுள்ளது. கடந்த 1958ம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடித்த 50வது படம் சாரங்கதாரா படமும் ஓடவில்லை. நாடகம் என விமர்சிக்கப்பட்டது.

கடந்த 1979ம் ஆண்டில் ரஜினி நடித்த 50வது படம் தெலுங்கில் வெளியான டைகர் படமும் தோல்வியடைந்தது. 1976ம் ஆண்டில் கமல் நடிப்பில் வெளியான 50வது படம் மோகம் 30 நாள் படமும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. கடந்த 2010ம் ஆண்டில் விஜய் நடித்த 50வது படம் சுறா, படுதோல்வியடைந்தது. ஆனால் அஜீத்குமார் நடித்த 50வது படம், 2011ல் வெளியான மங்காத்தா, 2014ம் ஆண்டில் விக்ரம் நடித்த 50வது படம் ஐ, நடப்பாண்டில் வெளியான விஜய் சேதுபதி நடித்த 50வது படம் மகாராஜா, இப்போது ரிலீஸ் ஆகியுள்ள தனுஷின் 50வது படம் ராயன் ஆகியவை மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன.

- Advertisement -

சற்று முன்