- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 68 பட அப்டேட் கொடுப்பார்னு பாத்தா.... வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?...

விஜய் 68 பட அப்டேட் கொடுப்பார்னு பாத்தா…. வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா? இதுக்கா இவ்ளோ பில்டப்

- Advertisement -

சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குந்ராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. முதல் படத்திலேயே தனது மேக்கிங்கில் அதகளம் செய்து ஒரு ஜாலியான ஃபிலிம் மேக்கர் என்பதை கோலிவுட்டுக்கு உணர்த்தியிருந்தார். கிரிக்கெட்டையும், நட்பையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் கடந்த ஆம் ஆண்டு வெயாகி பெரும் வெற்றி பெற்றது.

அதனையடுத்து சரோஜா படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக அந்த ஜானரிலும் காமெடித்தன்மையோடு கூடிய ஒரு படத்தை இயக்கலாம் என நிரூபித்துக்காட்டினார். முதல் இரண்டு படங்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு கோலிவுட்டின் முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்துவிட்டார் வெங்கட் பிரபு.

- Advertisement -

மூன்றாவதாக இயக்கிய கோவா படம் ஜாலியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் படம் தோல்வியையே சந்தித்தடு. இந்தச் சூழலில் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார். அஜித்தின் 50ஆவது படமாகவும் அது உருவாகியிருந்தது. அவரது 50ஆவது படத்தை வெங்கட் பிரபு சிறந்த முறையில் கொடுத்துவிடுவாரா எந்த நம்பிக்கையில் வெங்கட் பிரபுவை அஜித் இயக்குநராக டிக் அடித்தார் என அப்போது பலரும் பேசினார்.

அதற்கெல்லாம் அமைதியாக இருந்த வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார். தனது ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கை கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாமல் அதேசமயம் அஜிட்த்ஹுக்கான மாஸையும் குறைத்துவிடாமல் உருவாக்கியிருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அஜித்து அது தரமான கம்பேக்காகவும் அமைந்தது.

- Advertisement -

அதன் பிறகு அவர் இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம், கஸ்டடி ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. ஆனால் மாநாடு படம் இண்டஸ்ட்ரி ஹிட்டடித்தது. தற்போது அவர் விஜய் 68ஐ இயக்க கமிட்டாகியிருக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்தச் சூழலில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தை தயாரிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஆனந்த் என்பவர் இயக்கி நடிக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருபக்கம் வாழ்த்து தெரிவித்தாலும், வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு என்று சொன்னவுடன் விஜய் 68 பற்றியதாக இருக்கும் என நினைத்துவிட்டோம். ஆனால் வேறு ஒரு படம் பற்றிய அப்டேட்டை சொல்லிவிட்டாரே. இதற்குதான் இவ்வளவு பில்டப் ஏற்றினாரா என கேள்வி எழுப்பிவருகின்ரனர்.

- Advertisement -

சற்று முன்