- Advertisement -
Homeபொழுதுபோக்குதேடி வந்த பட வாய்ப்புகளை நிராகரித்த இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் இப்படி வெச்சு செஞ்சுட்டாரே? -...

தேடி வந்த பட வாய்ப்புகளை நிராகரித்த இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் இப்படி வெச்சு செஞ்சுட்டாரே? – புலம்பும் விபி!

- Advertisement -

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். அப்பாவை போல மகனும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார். கடந்தாண்டில் நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை வெங்கட்பிரபு இயக்கினார். இந்த படம் 445 கோடி ரூபாய் வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கலாம் என காத்திருந்த வெங்கட்பிரபுவுக்கு இந்த ஆண்டு இறுதி வரை பொறுத்திருங்கள் என்று அப்போது கூறினார் சிவகார்த்திகேயன். அவரது படத்தை அடுத்து இயக்கும் நம்பிக்கையில்தான் தி கோட் படத்தில் கிளைமாக்ஸில் விஜயுடன் எஸ்கேவை நடிக்கவும் வைத்திருந்தார் விபி.

- Advertisement -

ஆனால் சில தினங்களுக்கு முன் வெங்கட்பிரபுவை நேரில் வருமாறு அழைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். படம் குறித்து பேசவும் தனக்கு கால்ஷீட் தருவதற்காக நேரில் அழைக்கிறார் என்ற நம்பிக்கையுடன் சென்ற வெங்கட்பிரபுவிடம், எனக்கு நிறைய படங்கள் கைவசம் உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு என்னை தொந்தரவு செய்யாதீர்கள். அதன்பிறகு உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

நொந்து போன இயக்குனர் வெங்கட்பிரபு, இப்படி எஸ்கே நம்மை ஏமாற்றி விட்டாரே என்று வெறுத்துப் போன வெங்கட்பிரபு, எந்த தயாரிப்பாளரும் தனது அடுத்த படத்தை இயக்க முன்வராத நிலையில், எந்த நடிகரும் தனக்கு பட வாய்ப்பளிக்காத நிலையில் என்ன செய்வது என்று தெரியாத தவிப்பில் இருந்து வருகிறார்.

- Advertisement -

தி கோட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது ரூ. 5 கோடி பணத்துடன் வெங்கட்பிரபுவை நேரில் சந்தித்த ஒரு தெலுங்கு தயாரிப்பாளர், ஒரு படத்தை இயக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் படம் கைவசம் உள்ளதால் அந்த தயாரிப்பாளருக்கு வெங்கட்பிரபு நோ சொல்லி இருக்கிறார்.

அடுத்து 2 பிரபல தயாரிப்பாளர்கள் படம் இயக்க அணுகிய போதும், அவர்களையும் வேண்டாம், நான் சிவகார்த்திகேயன் படம் இயக்க வேண்டி உள்ளது என்று வெங்கட்பிரபு மறுத்து விட்டா். ஆனால் இப்போது 2 ஆண்டுகள் வரை உங்கள் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று சிவகார்த்திகேயன் ஏமாற்றி விட்டார். அதனால் பயங்கர அப்செட்டில் வெங்கட்பிரபு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்