- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் பிரஸ்மீட் வைக்காத முதல்வர், பத்திரிகையாளர்களை சந்திக்க விஜய் தயங்குவது ஏன்? அவரே நேரடியாக சொன்ன...

இன்னும் பிரஸ்மீட் வைக்காத முதல்வர், பத்திரிகையாளர்களை சந்திக்க விஜய் தயங்குவது ஏன்? அவரே நேரடியாக சொன்ன பதில்!

- Advertisement -

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த போதே நடிகர் விஜய் மற்ற ஹீரோக்களை போல செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்தது இல்லை. கட்சி ஆரம்பித்த பிறகும் தமிழக முதல்வரான பிறகும் விஜய் செய்தியாளர்களை இதுவரை சந்திக்கவில்லை. பிரஸ்மீட் வைக்கவில்லை. இது ஒரு பெரிய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இதுகுறித்து நடிகர் விஜய் தெளிவான விளக்கத்தை தந்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியானது. அப்போது பீஸ்ட் படத்தின் பிரமோசனுக்காக இயக்குனர் நெல்சன் – நடிகர் விஜய் இருவர் மட்டுமே பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய நெல்சன், நீங்கள் ஏன் பிரஸ்மீட் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுவது இல்லை, நேரமின்மை காரணமா என்று கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அப்போது விஜய் கூறியதாவது, செய்தியாளர்களை சந்திக்க நேரம் இல்லை என்று கிடையாது. நேரம் எல்லாம் நிறைய உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு பிரஸ்மீட்டில் சில விஷயங்களை சொன்னேன். கடைசியில் அது பத்திரிகைகளில் வெளியான போது தவறான அர்த்தத்தில் மக்களிடம் போய் சேர்ந்து விட்டது.

நான் சொன்ன விஷயத்தை எழுத்துகள் வடிவில் படிக்கும் போது ஏதோ நான் ஆணவமாக பேசியது போல் எனக்கே தோன்றியது. ஆனால் அப்படிப்பட்ட எண்ணத்தில் பேசவில்லை. நான் பேசிய விஷயம் வேறு மாதிரியாக தவறாக வந்து விட்டது. என் உறவினர்கள் நண்பர்கள் கூட அதை பார்த்து விட்டு நீ அந்த மாதிரி பேசற ஆள் இல்லையே என்று என்னிடமே கேட்டார்கள்.

- Advertisement -

அவர்களிடம் நான் உண்மையை விளக்கி சொன்னேன். நான் சொன்ன விஷயம் வேறு மாதிரி வந்துவிட்டது என்று புரிய வைத்தேன். ஆனால் அந்த விஷயத்தை படித்து என்னை தவறாக புரிந்துக்கொண்ட ஒவ்வொருவரிடமும் போய் நான் இப்படி புரிய வைக்க முடியாது. அதனால் தான் கடந்த 10 ஆண்டுகளாக நான் செய்தியாளர்களை சந்திப்பது இல்லை.

ஆனால் நான் ரசிகர்களிடம் மக்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் மனதில் இருந்தால் அதை என் படங்களின் விழா நிகழ்ச்சிகளிலோ இசை வெளியீட்டு விழாக்களிலோ தவறாமல் பேசி விடுகிறேன். இதுதான் நான் பிரஸ்மீட்டில் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்ப்பதற்கு காரணம் என்று நடிகர் விஜய் அப்போதே தெளிவாக கூறியிருக்கிறார். தமிழக முதல்வரான பிறகும் அதே பாலிசியில் இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்