- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா மகன் சண்டையை த கோட் படத்தில் கொண்டு வந்த இயக்குனர் வெங்கட்பிரபு - விஜய்...

அப்பா மகன் சண்டையை த கோட் படத்தில் கொண்டு வந்த இயக்குனர் வெங்கட்பிரபு – விஜய் ரசிகர்களுக்கு இது பிடிக்குமான்னு தெரியலையே?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது நடித்து முடித்துள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். த கோட் என சுருக்கமாக இந்த படம் அழைக்கப்படுகிறது. அதாவது எல்லா நேரத்திலும் சிறந்த மனிதனாக இருப்பவன் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த பெயர், படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் நீளமாக உள்ள இந்த பெயருக்கு தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என பலரும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.

வருகிற செப்டம்பர் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 14ம் தேதி, இந்த படத்தின் விசில் போடு பாடல் வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் சிங்கிளாக வெளியான இந்த பாடல் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் நடனமாடும் குத்தாட்ட பாடலாக இருந்தது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கே இந்த பாடல் காட்சி ஏமாற்றம் தந்தது.

- Advertisement -

வருகிற 22ம் தேதி நடிகர் விஜயின் 50வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், த கோட் படத்தின் 2வது சிங்கிள் வெளியாக இருக்கிறது. இதுவும் விஜய் பாடிய பாடல் காட்சியும், நடனமும் இடம்பெற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை, சிறப்பு பாடலாக திரிஷா விஜய் ஆடிய குத்தாட்டமாகவும் அது இருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் த கோட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் அப்பா, மகன் என்ற 2 கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார் என்பது ஏற்கனவே அறிந்த தகவல்தான். ஆனால் இதில் அப்பா, மகன் என்று இரண்டு விஜய் மோதிக் கொள்ளும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சண்டைக்காட்சியை, இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு வேற லெவலில் நவீன தொழில்நுட்பத்தில் படம்பிடித்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு, இந்த சண்டைக்காட்சியை பார்த்த படக்குழுவினர் பலரும், மிரண்டு போயிருக்கின்றனர். இது திரையில் வருவது, விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக, கொண்டாட்டமாக அமையும் என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் படத்தில் அப்பாவும் விஜய், மகனும் விஜய். இதில் அப்பா மகன் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டால் விஜய் ரசிகர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அழகிய தமிழ் மகன் படத்திலும் இதே போல் இரட்டை வேடத்தில் விஜய் நடித்து, இதுபோல் விஜயும், விஜயும் மோதிக் கொள்ளும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளும் வந்து, படம் சொதப்பியது. அதுபோல் எதுவும் நெகடிவ் ஆக போகாமல் இருந்தால் சரிதான் என்று ஒருதரப்பு ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்