- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம், வெற்றிமாறனுக்கு இந்த படத்தில் சம்பளமே இல்லையாம்...

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம், வெற்றிமாறனுக்கு இந்த படத்தில் சம்பளமே இல்லையாம் – கதை அப்படி போயிருச்சா?

- Advertisement -

நடிகர் சூர்யாவும் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து வாடிவாசல் படத்தை உருவாக்க இருந்த நிலையில் பல காரணங்களால் அந்த படம் டிராப் ஆகி விட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட வாடிவாசல் படத்துக்கான அக்ரிமென்ட் இப்போது காலாவதியாகி விட்டது. இதில் சூர்யா தந்த நெருக்கடிகளால் வெற்றிமாறன், வாடிவாசலே வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இப்போது சிம்பு நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்க தயாராகி விட்டார். இது தனுஷ் நடிக்க வேண்டிய வடசென்னை படத்தின் 2ம் பாகமாக கூறப்பட்டாலும், அந்த படத்தின் கதை அல்ல, அதன் தொடர்ச்சியும் அல்ல. வடசென்னை படத்தில் இருந்து பிரிந்த கிளை கதையில் வேறொரு பரிமாணத்தில் உருவாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

வடசென்னை படத்தில் முதலில் நடிக்க இருந்ததே சிம்புதான். அவர் நடிக்க முடியாமல் போனதால் தனுஷ் நடித்தார். இப்போது வடசென்னை 2ம் பாகத்தில் தனுஷூக்கு பதிலாக சிம்புவையே வெற்றிமாறன் கொண்டு வந்துவிட்டார். அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றிமாறனின் தரமான படைப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சிம்பு நடிக்கும் படத்தை மிக விரைவில் துவங்கி, சில மாதங்களுக்குள் முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு போய்விடும் ஒரு முடிவில் இயக்குனர் வெற்றிமாறன் இருக்கிறார். இதற்கு காரணம் என்னவென்றால் வாடிவாசல் படத்தில் கமிட் ஆகும்போது வெற்றிமாறனுக்கு தயாரிப்பாளர் தாணுவிடம் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக வாங்கியிருக்கிறார்.

- Advertisement -

அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளாக பல கமிட்மென்டுகள் காரணமாக தயாரிப்பாளர் தாணுவிடம் வாடிவாசல் படத்தை இயக்கும் சம்பளத்தை அவ்வப்போது பல லட்சங்களாக வாங்கி வாங்கி, இப்போது சிம்பு நடிக்கும் படத்தை சம்பளமே வாங்காமல் இயக்கும் அளவுக்கு முன்பணமாகவே மொத்த பணத்தையும் ஏற்கனவே வெற்றிமாறன் வாங்கி விட்டார்.

அதனால் இப்போதைக்கு தயாரிப்பாளர் தாணு, சிம்புவை இயக்கும் படத்துக்கு சம்பளமே தரவேண்டியது இல்லை. ஏனென்றால் வாடிவாசல் படத்துக்கு பதிலாக தான் தயாரிப்பாளர் தாணுவுக்கு இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். அதனால் ஏற்கனவே வாங்கிய சம்பளத்துக்கு இந்த படத்தை முடித்தால்தான், அடுத்த படத்தை விரைவில் இயக்கி சம்பளம் வாங்க முடியும் என்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இருந்து வருகிறார். எனவே படத்தை விரைவில் முடித்துவிடும் திட்டத்தில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்