- Advertisement -
Homeபொழுதுபோக்குபலத்த நஷ்டத்தில் இயங்கும் தியேட்டர் நிர்வாகங்கள், தமிழ் சினிமாவை காப்பாற்ற என்னதான் வழி? - இயக்குனர்...

பலத்த நஷ்டத்தில் இயங்கும் தியேட்டர் நிர்வாகங்கள், தமிழ் சினிமாவை காப்பாற்ற என்னதான் வழி? – இயக்குனர் வெற்றிமாறன் சூப்பர் ஐடியா!

- Advertisement -

தமிழ் சினிமா மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான கோடிகளில் படங்கள் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு படமும் 300 கோடி 400 கோடி ரூபாய் என வசூல் குவிக்கிறது என்று பெருமையாக ஒருபுறம் தெரிந்தாலும், உண்மையில் தமிழ் சினிமா அதலபாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பது தான் மாபெரும் உண்மை.

முன்னணி நடிகர்கள் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா விக்ரம் போன்றவர்கள் நடிக்கும் படங்கள்தான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இடையிடையே முன்னணி இயக்குனர்கள் எடுக்கும் முக்கிய படங்களும் வெளியாகின்றன. ஆனால் உண்மையில் இரண்டாம் தர மூன்றாம் தர படங்கள், சின்ன பட்ஜெ படங்கள் என்பது தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது.

- Advertisement -

முதலில் 100 சதவீதம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில், இப்போது 30 சதவீதம் படப்பிடிப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. பல தொழில்நுட்ப கலைஞர்கள் மாதக்கணக்கில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். வருடத்தில் 3 மாதங்கள் 4 மாதங்கள் வேலை இருந்தாலே பெரிய விஷயம் என்றும் நிலையில்தான் தமிழ் சினிமாவின் இன்றைய தொழில் நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டண உயர்வு, கேண்டீன் தின்பண்டங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களாலும் சினிமா தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டமும் வெகுவாக குறைகிறது. ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களை காணவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால் தியேட்டர்களுக்கு வருபவர் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களை குறைக்க வேண்டும், கேண்டீன் தின்பண்டங்கள் விலையை குறைக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் முக்கியமான ஒரு விஷயம் குறித்து பகிரங்கமாக பேசியிருக்கிறார். தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைவதை தடுக்கவும், தமிழ் சினிமாவை காப்பாற்றவும் முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அவர் சொல்லும் ஐடியா சிறப்பானதாக உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், இந்த நிலமையில் இருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற ஒரே வழி நடிகர்கள் சம்பளத்தை 30 முதல் 40 சதவீதம் வரை குறைத்துக் கொண்டு பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் தியேட்டர் வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் பணமே லாபம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என்று வெற்றி மாறன் பேசி இருக்கிறார். நடிகர்களின் சம்பளத்தை 30 முதல் 40 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற வெற்றிமாறன் யோசனை மிகச் சரியானது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்