- Advertisement -
Homeபொழுதுபோக்குதணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கலாமா? இது திரைத்துறைக்கு நல்லதல்ல - இயக்குநர் வெற்றிமாறன் கோபம்

தணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கலாமா? இது திரைத்துறைக்கு நல்லதல்ல – இயக்குநர் வெற்றிமாறன் கோபம்

- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் இருப்பவர். இலக்கிய படைப்பாளியாக, நல்ல இலக்கியங்களை காட்சிபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய வாசிப்பவராக இருக்கிறார். பொல்லாதவன் படத்துக்கு அவர் முதலில் வைக்க இருந்த பெயர் பாலகுமாரன் எழுதிய நாவலின் தலைப்பான இரும்புக்குதிரைகள் என்பதுதான்.

ஏனெனில் அந்த படம், மோட்டார் பைக்கை மையப்படுத்தியது. தனுஷ் புதிய பைக் வாங்கிய பின் அவருக்கு நடக்கும் நல்ல சம்பவங்கள், பைக்கை இழந்த பின் அவர் சந்திக்கும் பிரச்னைகள்தான் படத்தின் மையக்கரு. ஆனால், பொல்லாதவன் என்ற பெயர் தனுஷூக்கு பிடித்துவிட்டதால் அந்த பெயரே வைக்கப்பட்டது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து ஆடுகளம், வட சென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 படங்களை தந்துள்ள வெற்றிமாறன், இப்போது விடுதலை 2 படத்தை உருவாக்கி வருகிறார். அந்த படம் நீண்டுக்கொண்டே போகிறது. இதற்கிடையே சூர்யா – அமீர் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவும் ஆயத்தமாகி வருகிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறனை பொருத்தவரை கதை, திரைக்கதை, இயக்கத்துக்கு பிறகுதான் கதையின் கேரக்டர்களாக நடிக்கும் நடிகர், நடிகைகள்தான். அதாவது கதைமாந்தர்கள்தான் பாத்திரங்களே தவிர, கலைஞர்களை மையப்படுத்தி, கதை மாந்தர்கள் இவரது படத்தில் இல்லை என்பதுதான் வெற்றிமாறனின் பிளஸ் பாயிண்ட்.

- Advertisement -

இந்நிலையில், நயன்தாரா நடித்த 75வது படம் சமீபத்தில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, தனது கோபத்தை வெற்றிமாறன் பதிவு செய்திருக்கிறார். அதில், தணிக்கை செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று, இந்தியாவில் எதுவுேம இல்லை. இது ஓடிடி தளங்களுக்கும் பொருந்தும்.

தணிக்கை குழுவால் அங்கீகரித்து அனுமதி கொடுத்த ஒரு படத்தை, அழுத்தம் கொடுத்து ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவது திரைத்துறைக்கே நல்லது அல்ல. ஒரு படத்தை அனுமதிக்க, தடை செய்ய தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதுபோன்ற செயல்கள், தணிக்கை குழுவின் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது என பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்