- Advertisement -
Homeபொழுதுபோக்குகலவையான விமர்சனங்களை தாண்டி வேட்டையன் நடத்தி வரும் வசூல் வேட்டை - அட… 4 நாட்களில்...

கலவையான விமர்சனங்களை தாண்டி வேட்டையன் நடத்தி வரும் வசூல் வேட்டை – அட… 4 நாட்களில் இத்தனை கோடியா? லைகா புரடக்சன்ஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

- Advertisement -

கடந்தாண்டில் வெளிவந்த ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் வேட்டையன். கடந்த 10ம் தேதி வெளியான வேட்டையன் படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

இதற்கு முன்பு நடித்த ஜெயிலர் படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் வேட்டையன் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மேலும் இதில் ரஜினிக்கு ஜோடியாக மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.

- Advertisement -

கேமியோ ரோலில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாபச்சன் நடித்திருந்தார். தமிழில் அமிதாபச்சன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ராணா டகுபதி, பகத் பாசில், கிஷோர், ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன், ரோகிணி, ரக்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களின் நடித்திருந்தனர்.

வேட்டையன் படத்துக்கு முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டது. ஜெயிலர் படம் போல் வேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் பெருவாரியான ஆதரவை தெரிவிக்கவில்லை. ஒரு தரப்பினர் மட்டுமே இந்த படம் நல்ல சோஷியல் சப்ஜெக்ட், சமூக விழிப்புணர்வு நிறைந்த படம். இது போன்ற சமூக கருத்துகள் உள்ள விழிப்புணர்வு படங்கள் வரவேண்டும். அதிலும் ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் இதுபோன்ற படங்களில் நடிப்பது தமிழ் சினிமா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

- Advertisement -

எனினும் முதல் நாளில் தமிழ்நாட்டில் 17 கோடி ரூபாயும், உலக அளவில் 60 கோடி ரூபாயும் வேட்டையன் படம் வசூலித்ததாக கூறப்பட்டது. 2ம் நாளில் உலக அளவில் 37 கோடி அளவில் மட்டுமே வசூல் இருந்ததாக தெரியவந்தது. ஆனால் தொடர்ந்து 2 நாட்களில் ஆயுத பூஜை விடுமுறை நாட்களில், தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. அந்த வகையில் வேட்டையன் படம் வசூல் தாறுமாறாக எகிறி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

வேட்டையன்படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்‌ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பில், இதுவரை வேட்டையன் படம் 240 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அறிவித்துள்ளது. 4 நாட்களில் உலக அளவில் இவ்வளவு பெரிய வசூலை நடிகர் ரஜினிகாந்த் செய்திருப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் என வேட்டையன் பிற மொழிகளிலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. குறிப்பாக கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து 10 கோடி ரூபாய்க்கு வசூலித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்