- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தின் கதையை அப்பட்டமாக சொன்ன வேட்டையன் படத்தின் டீசர், தர்பார் படத்திலேயும் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்...

படத்தின் கதையை அப்பட்டமாக சொன்ன வேட்டையன் படத்தின் டீசர், தர்பார் படத்திலேயும் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தானே பாஸ்? – அரைச்ச மாவு புளிக்காம இருந்தா சரிதான்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. இந்த டீசரை பார்க்கும்போது வேட்டையன் படத்தின் கதை இதுதான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறார். பல பேரை சுட்டுக்கொல்கிறார். நான் சிவப்பு மனிதன் படத்தை போலவே, இதில் எப்போதும் துப்பாக்கியுடன் ரஜினியை காட்டுகின்றனர்.

படத்தில் போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார். என்கவுண்டர் விவகாரங்களை விசாரிக்கும் குழு உயரதிகாரியாக அமிதாபச்சன் நடித்திருக்கிறார். அவருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.இந்த படத்தில் பகத் பாசில் ரஜினிகாந்தின் மகனாக நடித்திருப்பதாக தெரிகிறது. மனைவியாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார். அபிராமி, ரோகினி, துஷாரா விஜயன் போன்றவர்களும் இந்த படத்தில் காணப்படுகின்றனர்.

- Advertisement -

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரஜினிகாந்த் பல பேரை சுட்டுக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மீது விசாரணையும் வருகிறது. கதைக்களம் தூத்துக்குடி என்பதால், அவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக படத்தில் வருவதாக தெரிகிறது. அதனால் அங்கு நடக்கும் கடத்தல் சம்பவங்கள், இல்லீகல் பிசினஸ் எல்லாவற்றையும் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக தடுத்து அனைவரையும் சுட்டுக் கொல்வது போல் படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக டீசர் மூலம் தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தில் என்கவுண்டர் என்ற பெயரில் பலபேரை சுட்டுக் கொள்வது தான் ஹீரோயமா என்று ஒரு காட்சியில், விசாரணை அதிகாரியான அமிதாபச்சன் கேள்வி எழுப்புகிறார். அதற்கு மற்றொரு காட்சியில், ரஜினிகாந்த், என்கவுண்டர் என்பது மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டும் அல்ல, மீண்டும் அத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க செய்யப்படும் முன்னெச்சரிக்கை என்று ரஜினி விளக்கம் அளிக்கிறார்.

- Advertisement -

மொத்தத்தில் என்கவுண்டர் சரி என்று ஒரு தரப்பும், என்கவுண்டர் தவறு என்று ஒரு தரப்பும் இந்த படத்தில் வாதம் செய்வார்கள் என்பது தான் படத்தின் கதையாக இருக்கிறது. ஏற்கனவே நிறைய படங்களில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து விட்டார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக தான் நடித்திருந்தார். வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகதான் வருகிறார். இப்படி காக்கிச்சட்டை கேரக்டரில் தொடர்ந்து ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பது அரைத்த மாவை மீண்டும் அரைத்தது போல தான் இருக்கிறது. ஆனால் அரைத்த மாவு தான் என்றாலும் புளிக்காமல் இருந்தால் சரி தான் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்