நடிகர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் இங்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு என்பதை பெருவாரியாக விளக்க வைத்தவர் வெற்றிமாறன். இந்திய சினிமாவிலேயே மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருக்கும் அவருக்கு, ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய ஆறு படங்களுமே தரமாக இருந்ததால், அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தார் வெற்றிமாறன். அப்போது அது ஒரு கனா காலம் சூட்டிங்கில் தனுஷிற்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அப்போது பொல்லாதவன் திரைப்படத்தின் கதையை தனுஷிடம் கூற, அதற்கு நாயகரும் ஓகே சொன்னதால் இருவரும் இணைந்து அந்த படத்தை எடுத்தனர்.
2007 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற, அதன் பிறகு மீண்டும் ஆடுகளம் படத்தில் இருவரும் இணைந்தனர். சேவல் சண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களின் விருப்பத் திரை காவியமாக மாறியது. அதுமட்டுமல்லாமல் படத்தில் கருப்புவாக வாழ்ந்த தனுஷ் இருக்கும் தேசிய விருதை இந்த படம் பெற்றுக் கொடுத்தது.
இதன் பிறகு விசாரணையை எடுத்த கையோடு, மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கின. இதில் அசுரன் திரைப்படத்திற்காக தனுஷ் மீண்டும் தேசிய விருதை பெற்றார். இதை எடுத்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்கும் இடையே இருந்த கால்ஷீட் பிரச்சனையால் அது தள்ளிப் போனது.
இந்த இடைவெளியில் விடுதலை படத்தை இயக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். சூரியை முதன்மை பாத்திரத்தில் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றது. விஜய் சேதுபதியும் படத்தில் உள்ளே வந்ததால், படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வெற்றி மாறன் முடிவெடுத்தார். அதில் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இரண்டாம் பாகத்தை அவர் எடுத்து வருகிறார். இதில் மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். இது குறித்து தற்போது பேசி இருக்கும் வெற்றிமாறன், நான் இந்த படத்தை நான்கரை கோடி ரூபாயில் முடித்து விடுவதாக கூறினேன். ஆனால் முதல் பாகத்திற்கு மட்டுமே 65 கோடி ரூபாய் செலவானது. நான் படப்பிடிப்பில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை யாரிடமும் கூறவில்லை. நான் என்ன எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இப்போது வரைக்கும் நான் அந்த படத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று பேசி இருக்கிறார். வெற்றிமாறனின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.





