- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறனுடன் சிலம்பரசன் கைகோர்க்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு பெயரா... இணையதளத்தை அதிர வைத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு......

வெற்றிமாறனுடன் சிலம்பரசன் கைகோர்க்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு பெயரா… இணையதளத்தை அதிர வைத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு… எஸ் டி ஆர் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி….

- Advertisement -

விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் அடுத்ததாக, வாடிவாசல் திரைப்படத்தை தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் பேசி இருந்தார். ஆனால் சூர்யா அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டானதால், உடனடியாக இருவரும் இணைவார்களா என்ற கேள்வி எழுந்தது.

இப்படியான சூழலில் வெற்றிமாறன் அடுத்ததாக சிலம்பரசன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், அது வட சென்னை படத்தில் இரண்டாம் பாகம் என்றும் பலர் கூறினார்கள். இது தொடர்பான ப்ரோமோ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கசிந்தது. அதில் வெற்றி மாறன் சிலம்பரசன் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் இருந்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட வெற்றிமாறன், சிலம்பரசன் உடன் இணையப் போகும் திரைப்படத்தை உறுதிப்படுத்தினார். ஆனால் இது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும், அதற்கு தனுஷ்தான் ஹீரோ என்றும் தெரிவித்திருந்தார். அதேசமயம் சிலம்பரசன் உடன் இணையும் திரைப்படம் வடசென்னை உலகில் இருக்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், படத்திற்கான என்ஓசி கிடைப்பதில் எந்த சிக்கலும் எழவில்லை என்றும், இது பற்றி பேசியதும் தனுஷ் உடனடியாக கொடுத்து விட்டார் எனவும் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பலரது பார்வையும் வெற்றிமாறன் சிம்பு படம் மீது விழுந்தது. வெற்றிமாறன் செல்லும் இடங்களில் எல்லாம் அது குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

- Advertisement -

இன்னும் பத்து நாட்களில் அப்டேட் வரும் என்ற ஒரே ஒரு பதில்தான் வெற்றிமாறனிடம் இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க அண்மையில் கலைப்புலி தாணு படத்தில் இருந்து ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால் அதுவும் வெளியாகவில்லை. நேரடியாக திரையரங்குகளுக்கும் ப்ரோமோ வீடியோ ஒளிபரப்ப இருப்பதால், தணிக்கை சான்று பெற்றுவிட்டுதான் வரும் என அவர் கூறியிருந்தார்.

இப்படியான சூழலில், வெற்றிமாறன் சிலம்பரசன் படத்திற்கு அரசன் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கலைப்புலி எஸ் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அது தொடர்பான போஸ்டரில் சிலம்பரசன் கையில் அரிவாளுடன் காட்சியளிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் வரும் 17ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில், வடசென்னை போன்று செட் போட்டுதான் படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார்களாம். தற்போது நேரடியாக களத்திலேயே இறங்கி படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்