- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா சிவக்குமார் வழியில் மகன் சூர்யா… இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாரா? - ஆச்சரியப்பட்ட தமிழ்...

அப்பா சிவக்குமார் வழியில் மகன் சூர்யா… இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாரா? – ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலத்திலேயே நடிக்க வந்தவர் நடிகர் சிவக்குமார். கோவையை சேர்ந்த சிவக்குமார் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார். ஓவியர். சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றால் ஓவியராக தன் வாழ்க்கையை தொடரவும் சிவக்குமார் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் அவரது இளமையான அழகிய தோற்றம் தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. எம்ஜிஆர் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. குறிப்பாக கடவுள் கதைகளை கொண்ட படங்களில் முருகன் வேடத்தில் நடிக்க சிவக்குமாருக்கு நிறைய வாய்ப்பு அமைந்தது.

- Advertisement -

அதனால் பல படங்களில் கடவுள் முருகன் வேடத்தில் சிவக்குமார் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் முருகன் பெயரை சொன்னாலே சினிமா ரசிகர்களுக்கு சிவக்குமார் முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு அந்த தோற்றத்தில் ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தவர் சிவக்குமார். இப்போது சிவக்குமாரின் மகன்கள் சூர்யா கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக உள்ளனர்.

ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த அவரது 45வது படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா கடவுள் வேடத்தில் நடித்திருக்கிறார். அதாவது கடவுள் வக்கீல் என 2 கேரக்டர்களில் 2 காலகட்டங்களில் படத்தின் கதைக்களம் இல்லாமல், கடவுளாக உள்ள சூர்யாவே வக்கீலாக படத்தில் வருவது போன்ற கேரக்டரை ஆர்ஜே பாலாஜி உருவாக்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் டைட்டில் முதலில் வேட்டை கருப்பு என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்த படத்தின் பெயர் கருப்பு என்று மாற்றப்பட்டு உள்ளதாகவும் வருகிற 20ம் தேதி இயக்குனர் ஆர்ஜே பாலாஜியின் பிறந்த நாளில் படத்துடன் டைட்டிலுடன் டீசர் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமான சூர்யா படங்களை போல இல்லாமல் இந்த படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாகவும் சிங்கம் சிங்கம் 2 படங்களை போல அவருக்கு மாஸ் இமேஜை தரும் ஒரு படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்பா சிவக்குமாரை போல மகன் சூர்யாவும் கடவுள் வேடத்தில் கருப்பு படத்தில் நடித்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்