தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் ஆசை போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி செய்தவர் எஸ்ஜே சூர்யா. அதன் பிறகு நடிகர் அஜீத் குமார் 2 வேடங்களில் நடித்த வாலி படம் மூலம் இயக்குனராக அவர் அறிமுகமானார். சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை எஸ்ஜே சூர்யாவுக்கு கொடுத்தது.
அடுத்து நடிகர் விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து அன்பே ஆருயிரே நியூ போன்ற சில படங்களை இயக்கிய எஸ் ஜே சூர்யா அந்த படங்களில் அவரே ஹீரோவாக நடிக்கவும் செய்தார். அதே நேரத்தில் கள்வனின் காதலி திருமகன் வியாபாரி போன்ற மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் சில படங்களில் அவர் நடித்தார்.
இந்த படங்கள் எல்லாமே எஸ்ஜே சூர்யாவுக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் திடீரென 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து எஸ்ஜே சூர்யா காணாமல் போய்விட்டார். அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அடுத்து மெர்சல் ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் எஸ்ஜே சூர்யா வில்லன் நடிப்பில் அசத்தியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு வெளியான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படத்திலும் நடிகர் விஷாலுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவரது சிறந்த வில்லன் நடிப்புக்கு நடிப்பு அரக்கன் என்ற பட்டமும் கிடைத்தது. அதன் பிறகு ராயன் கேம் சேஞ்சர் இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களிலும் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்தார். ஆனால் மார்க் ஆண்டனி மாநாடு படங்களை போல் பெரிய அளவில் அவருக்கு வில்லன் கேரக்டர் இந்த படங்களில் பலத்த வரவேற்பை பெற்று தரவில்லை.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். மாநாடு மார்க் ஆண்டனி படங்களை போலவே இந்த சர்தார் 2 படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். நிச்சயமாக இந்த படம் அவருக்கு சூப்பர் கம்பேக் கொடுக்கும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





