- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி மேல ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வீண் போகல... அஜித் ரசிகர்களை ஆனந்தப்படுத்திய அசத்தலான தகவல்......

விடாமுயற்சி மேல ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வீண் போகல… அஜித் ரசிகர்களை ஆனந்தப்படுத்திய அசத்தலான தகவல்… இது ஒன்னு போதுமே இன்னும் ஒரு மாசத்துக்கு…

- Advertisement -

நடிகர் அஜித் குமார் தனது 62 ஆவது திரைப்படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் தான் இணைவதாக இருந்தது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியானது. பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா இதனை எடுப்பதாக அறிவித்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால், படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.

 

- Advertisement -

இப்படியான சூழலில், மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை எடுப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்தது. கடந்த ஆண்டு மே மாதம் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அப்போதே படத்திற்கு விடா முயற்சி என்று டைட்டிலும் வைக்கப்பட்டது. சஸ்பென்ஸ் திரில்லராக இது உருவாவதாக தகவல் வெளியாகி இருந்தது.

 

- Advertisement -

ஆனால், அஜித் பிறந்தநாளோடு இது தொடர்பான அப்டேட்டை நிறுத்திவிட்டது தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் படக் குழுவினரே சூட்டிங் சென்றனர். இதற்காக அஜர்பைஜான் நாட்டை மகிழ்திருமேனி தேர்வு செய்திருந்தார். அங்கு அக்டோபர் மாதம் ஷூட்டிங் நடைபெற்றது.

 

இதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியது குறித்தோ, அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய லைக்கா நிறுவனம் வாய் திறக்கவில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தே ரசிகர்கள் படத்தில் நடிப்பவர்களை தெரிந்து கொண்டனர். இதேபோல் விடாமுயற்சிக்கு அனிருத் இசையமைப்பதும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியபோதே தெரிந்தது.

 

இதனைத் தொடர்ந்து அங்கு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்ற போதும், தயாரிப்பு நிறுவனம் இடமிருந்து ஒரு தகவல் கூட வெளிவரவே இல்லை. அஜித் ரசிகர்கள் இது பற்றி கேட்டுக் கொண்டே இருக்க, நடிகரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் படப்பிடிப்பின் போது அஜித் மற்றும் ஆரவ் இருவரும் கார் விபத்துக்கு உள்ளாகும் காட்சி வெளியாகி இருந்தது. இதைப் பார்த்து அலறிப்போன அஜித் ரசிகர்கள், இனி நாங்கள் அப்டேட் கேட்க மாட்டோம் என்று ஓடிவிட்டனர்.

 

ஆனால் அஜித் பிறந்தநாளன்று ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் வெளியாகும் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படியான சூழலில் தான், விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவது உறுதியாக இருக்கிறது. இதனை சுரேஷ் சந்திரா தான் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில் நாளை ஏழு மணிக்கு என்று குறிப்பிட்டு, லைக்கா நிறுவனத்தின் பெயரை பதிவிட்டு இருக்கிறார். இது நிச்சயமாக விடாமுயற்சி அப்டேட்தான் என்று ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். அனேகமாக விடாமுயற்சியின் ரிலீஸ் குறித்த அறிவிப்பாகத்தான் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்