- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பு தளத்தில் அப்படி ஒரு திடீர் உத்தரவை போட்ட நடிகர் விஜய் சேதுபதி - சீனியர்...

படப்பிடிப்பு தளத்தில் அப்படி ஒரு திடீர் உத்தரவை போட்ட நடிகர் விஜய் சேதுபதி – சீனியர் நடிகர்கள் ரஜினி, கமல் எல்லாம் இதை கண்டுக்கறதே இல்லையே?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். துணை நடிகராக ஆரம்பத்தில் புதுப்பேட்டை, சுந்தரபாண்டியன், வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் நடித்தவர் பிறகு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் கதாநாயகனாக மாறினார். முதல் படமே ரசிகர்களின் கவனம் பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆனார்.

இதில் சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்கள் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து சேதுபதி, ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, கருப்பன், ரெக்க, காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் நாயகனாக நடித்து முன்னணி நடிகரானார்.

இதற்கிடையே பேட்ட படத்தில் ரஜினிக்கும், விக்ரம் படத்தில் கமலுக்கும். மாஸ்டர் படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்தார். இந்தியில் அட்லி இயக்கிய ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்து வரவேற்பை பெற்றார். ஆனால் அதற்கு பின் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி, மாமனிதன் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.

ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை படத்தில், வாத்தியார் பெருமாள் கேரக்டரில் அசத்தலான நடிப்பை தந்திருந்தார். இதில் சூரி நாயகனாக நடித்திருந்தார். இப்போது விடுதலை 2 படத்திலும் சூரி, விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். புதுக்கோட்டையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக மிஷ்கின் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படங்களின் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் விஜய் சேதுபதி, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணிசெய்து வருகிறார். வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒதுக்கி உள்ளார்.

சமீபத்தில் தனது படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய் சேதுபதிக்கு தனக்கு ஒருவிதமான விருந்து போன்ற உணவும், ஜூனியர் நடிகர்களுக்கு வேறுவிதமான உணவும் மெனுகார்டில் இருந்தது தெரிய வந்துள்ளது. எல்லா மனிதர்களும் ஒன்றுதான், பசியும் ஒன்றுதான். உணவில் பாகுபாடு காட்ட வேண்டாம். அனைவருக்கும் ஒரே விதமான, தரமான சுவையான உணவு பரிமாறுங்கள் என்று தயாரிப்பாளரிடம் ஸ்டிக்ட் ஆக உத்தரவிட்டிருக்கிறார். இது சீனியர்கள் எம்ஜிஆர், கேப்டன் பாணி. ஆனால் ரஜினி, கமல் கூட இதை கண்டுக்கலையே என, படக்குழு ஊழியர்கள் மக்கள் செல்வனை பாராட்டி உள்ளனர்.

சற்று முன்