- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் - வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படம்...

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் – வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படம் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகுது தெரியுமா?

- Advertisement -

தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் அடுத்த 4 வாரங்கள் அல்லது 8 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் ரிலீஸாகின்றன. தியேட்டரில் அந்த படங்களை பார்க்காமல் தவற விட்டவர்கள் ஓடிடி தளங்களில் அந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். தியேட்டரில் பார்த்த படமாக இருந்தாலும் மீண்டும் படத்தை ரசித்து ஓடிடி தளங்களில் பார்க்கவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் படங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. முபாசா தி லயன் கிங் என்ற திரைப்படம் கடந்த 1994ம் ஆண்டு வெளியான அனிமேஷன் செய்யப்பட்ட அசல் படமான தி லயன் கிங்கின் முன்னுரை மற்றும் 2019ம் ஆண்டு வெளியான ரீமேக்கின் தொடர்ச்சியாகும். இந்த படம் 26ம் தேதி அதாவது இன்று ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதேபோல் தி ஸ்டுடியோ என்ற நகைச்சுவை தொடர் இன்று, 26ம் தேதி வெளியானது. தி ஸ்டுடியோவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் மேட் ரெமிக் வேடத்தில் சேத் ரோஜன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் இன்று, 26ம் தேதி ஆப்பிள் டிவி பிளஸ் தளத்தில் ரிலீஸ் ஆகி ஒளிபரப்பாகி வருகிறது.

அடுத்து தமிழில் உருவாகியுள்ள படம் செருப்புகள் ஜாக்கிரதை. இது செருப்பை மையக்கருவாகக் கொண்ட ஒரு நகைச்சுவை திரைப்படமாகும். இந்த படத்தில் முதன்மை கேரக்டரில் நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். பல கதாபாத்திரங்களுடன் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்த படம் தொடராக வெளியாக உள்ளது. இது வருகிற 28ம் தேதி, நாளை மறுதினம் ஜீ 5 தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

லோரி நெல்சன் ஸ்பீல்மேனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தி லைப் லிஸ்ட். லெக்ஸ் ரோஸ் (சோபியா கார்சன்) தனது தாயின் மறைவுக்குப் பிறகு தன் குழந்தைப்பருவ ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை தொடங்குவது போல் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் நாளை மறுதினம் 28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

அடுத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 1 படத்தின் தொடர்ச்சியாக வெளியான படம் விடுதலை 2. பள்ளி ஆசிரியராக இருந்து தீவிர கம்யூனிஸ்ட் தலைவராக மாறிய பெருமாள் வாத்தியாரின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை இது. விஜய் சேதுபதி சூரி மஞ்சு வாரியார் கிஷோர் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கினார். இந்த திரைப்படம் நாளை மறுதினம் 28ம் தேதியன்று ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்