- Advertisement -
Homeபொழுதுபோக்குபொளந்து கட்டுவாருன்னு பார்த்தா… இப்படி பொட்டிப் பாம்பா அடக்கி வாசிக்கிறாரே? - பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள்...

பொளந்து கட்டுவாருன்னு பார்த்தா… இப்படி பொட்டிப் பாம்பா அடக்கி வாசிக்கிறாரே? – பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் செல்வனை விமர்சிக்கும் பார்வையாளர்கள்!

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டில் விஜய் டிவியில் துவங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி இப்போது 9வது ஆண்டாக நடந்து வருகிறது. 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்போது கடந்த 2 ஆண்டுகளாக பிக்பாஸ் சீசன் 8 மற்றும் சீசன் 9 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை போட்டியாளர்களை காட்டிலும் அதன் தொகுப்பாளர்தான் அந்நிகழ்ச்சியை விறுவிறுப்பாக சுவாரசியமாக வாரந்தோறும் கொண்டுசெல்வது வழக்கம். அந்த அடிப்படையில்தான் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பிரச்னைகளை பஞ்சாயத்துக்களை விவகாரங்களை குறிப்பிட்டு பேசி கண்டித்து பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

குறிப்பாக குறிப்பிட்ட போட்டியாளர்கள் என்று பாரபட்சம் இன்றி வீட்டுக்குள் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவரது பாணியில் கிண்டலடித்து பேசியும், அதே நேரத்தில் அவர்கள் செய்த தவறுகளை கடுமையான வார்த்தைகளால் சுட்டிக்காட்டியும் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியை பாரபட்சம் இன்றி நல்ல முறையில் கொண்டு சென்றார்.

அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை பார்க்காதவர்கள் கூட கமல் வருகிற சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் சீசன் 9ல் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சில போட்டியாளர்கள் நடவடிக்கைகள், அவர்கள் பேசுகிற வார்த்தைகள் அவர்கள் நடந்து கொள்கிற விதம் அவர்கள் செயல்படும் முறை எல்லாமே தாறுமாறாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் சொல்லும் விதிமுறைகளையே அவர்கள் பின்பற்றுவதில்லை.

- Advertisement -

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் காதல் லீலை நடத்தி வரும் கம்ருதீன் பார்வதி குறித்து விஜய் சேதுபதி இந்த வாரம், நேற்றைய நிகழ்ச்சியில் மிக கடுமையாக கண்டித்து பேசுவார். குறிப்பாக ஆக்டிவிட்டி ஏரியாவில் அவர்கள் தனியறைக்குள் சென்று முத்தமிட்டது கொண்டது குறித்து திட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில், வீட்டுக்கு தலையாக இருந்த அமித்தை விஜய் சேதுபதி குற்றம் சாட்டி பேசியதும், அவரை குற்றவாளியாக பேசியதும் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

விதிமுறைகளை மீறி தப்பு செய்தவர்களை விட்டுவிட்டு அப்பாவிகளை மிரட்டுவதும் கண்டிப்பதும் தான் விஜய் சேதுபதிக்கு வேலையா என்று பார்வையாள்கள் பலரும் விமர்சனம் செய்கின்றனர். மேலும் கம்ருதீன் பார்வதி குறித்து பேசி பொளந்து கட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இப்படி பொட்டிப் பாம்பாக இருக்கிறாரே? டிஆர்பி ரேட்டுக்காக இப்படியும் பம்ம வேண்டுமா என்று தொகுப்பாளர் விஜய்சேதுபதியை பலரும் கடுமையாக திட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்