- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடை படத்தின் கதைக்களம் இதுதான்… ஒரு காலத்தில் அப்படி நடித்த நடிகர் தனுஷ் இப்போது...

இட்லி கடை படத்தின் கதைக்களம் இதுதான்… ஒரு காலத்தில் அப்படி நடித்த நடிகர் தனுஷ் இப்போது இயக்குனராக இப்படி பிராயசித்தம் தேடுகிறாரோ…?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் இட்லி கடை. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வருகிற அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று இந்த படம் வெளியாகிறது. நித்யா மேனன் ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் அருண்விஜய் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

இட்லி கடை படத்தின் கதை பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் கதை என ஒரு தகவல் பரவிய நிலையில், நடிகர் தனுஷ் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். திருச்சியில் நடந்த இட்லி கடை படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய அவர், இது முழுக்க முழுக்க எனது கற்பனையிலும் நான் வாழ்க்கையில் பார்த்த சம்பவங்களில் இருந்தும் உருவான கதை என்றும் கூறிவிட்டார்.

- Advertisement -

இந்த படம் இயக்குனராக நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் 4வது படமாகும். அவர் இயக்கிய முதல் படம் ப பாண்டி படத்தின் கதைக்களம் முதியோர் காதலை சென்டிமென்டான சொன்னது. தனுஷ் இயக்கிய 2வது படம் ராயன் ஆக்சன் களத்தில் அதிரடி படமாக இருந்தது. தனுஷின் 3வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் டீன் ஏஜ் காதலை மையப்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இட்லி கடை படத்தின் கதைக்களம் என்பது அப்பா – மகன் இடையிலான பாசக்கதை என்று தெரிய வந்துள்ளது. அப்பா உயிருடன் இருக்கும் போது அவரை மதிக்கவும் கொண்டாடவும் மறந்துவிடும் பிள்ளைகள், அவரது மறைவுக்கு பின் தந்தையின் பாச உணர்வை புரிந்துக்கொண்டு எப்படி மனம் உடைகிறார்கள் என்பதே இட்லி கடை படத்தின் மையக்கதை என்கின்றனர்.

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிக்க வந்த ஆரம்பகால கட்டத்தில் சில படங்களில் தந்தையை மதிக்காத தந்தை சொல் கேட்காத ஒரு அடாவடியான பிள்ளை கேரக்டரில் நடித்திருப்பார். குறிப்பாக திருடா திருடி திருவிளையாடல் ஆரம்பம் யாரடி நீ மோகினி போன்ற படங்களில் அப்பாவை மதிக்காத ஒரு பிள்ளையாக தனுஷ் நடித்திருப்பார். பல இடங்களில் அப்பாவை அலட்சியப்படுத்தி பேசும் காட்சிகள் அதில் இருந்தன.

அதற்கு பிராயசித்தம் தேடுகிற வகையில்தான் இப்போது நடிகர் தனுஷ் இப்போது அப்பா மகன் உறவின் மேன்மையை சொல்லும் இட்லி கடை போன்ற படங்களை அவரே சொந்தமாக டைரக்ட் செய்கிறாரா என்று விமர்சிக்கும் அளவுக்கு இட்லி கடை படத்தை ஒரு பீல்டு குட் எமோஷனல் படமாக தனுஷ் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. தவிர டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் போன்ற ஃபேமிலி சென்டிமென்ட் படங்கள் எளிதில் ஜெயிப்பதாலும் இட்லி கடை படத்தை தனுஷ் அந்த வரிசையில் உருவாக்கி இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்