- Advertisement -
Homeபொழுதுபோக்குகடவுளிடம் பிரார்த்தனை செய்வதை போல என் மனைவி நயன்தாராவிடம் நான் அதை செய்வேன் - ஓபன்...

கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை போல என் மனைவி நயன்தாராவிடம் நான் அதை செய்வேன் – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த விக்னேஷ் சிவன்!

- Advertisement -

நடிகர் சிம்பு வரலட்சுமி சரத்குமார் விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்த போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கிய அவர், நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர் பல பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்த போது அதில் நாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகளாக அவர்கள் நெருக்கமாக காதலித்த நிலையில் 2023ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த உயிர், உலகம் என்ற 2 ஆண்பிள்ளைகள் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எல்ஐகே படம் ரிலீஸாகி உள்ளது. பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். கலவையாக விமர்சனங்களுடன் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் நடிகை நயன்தாராவும் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற எல்ஐகே பட இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதாவது, எங்கள் காதல் கவிதை போல இன்னும் அழகாக இருக்கிறது. நான் எந்த பாடல் எழுதினாலும் அதை நயன்தாராவுக்கு அனுப்புவேன். நல்ல காரியத்தை செய்யும்போது கடவுளிடம் பிரார்த்தனை செய்து அதை திரும்ப பெறுகிறோம் அல்லவா? அப்படித்தான்.

- Advertisement -

நான் ஒரு பாடல் எழுதினால் அதை நயன்தாராவுக்கு அனுப்புவேன். நயன்தாரா அதை படித்துவிட்டு தேவதை எமோஜியையும் இதயத்தையும் அனுப்புவார். அதற்கு பிறகு தான் நான் அந்த பாடலை இசையமைப்பாளர்களுக்கு அனுப்புவேன். நாங்கள் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் நான் எழுதிய பாடலை அனுப்பினால் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பதில் அனுப்புவார்.

மற்றவர்களது மனைவிகளை போலவே நயன்தாராவிற்கும் கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும். ஆனால் நயன்தாராவை போல் இனிமையான மென்மையானவர் வேறு யாரும் இல்லை. எங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே காரில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். வாழ்க்கை ரொம்பவும் அழகாக இருக்கிறது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்