- Advertisement -
Homeபொழுதுபோக்குவருங்கால வாக்காளர்களே- மாணவர்களை பார்த்து உற்சாகத்தோடு கூறிய விஜய், இப்போவே அரசியலை ஸ்டார்ட் பண்ணிட்டாரோ?

வருங்கால வாக்காளர்களே- மாணவர்களை பார்த்து உற்சாகத்தோடு கூறிய விஜய், இப்போவே அரசியலை ஸ்டார்ட் பண்ணிட்டாரோ?

- Advertisement -

விஜய்யின் அரசியல் நுழைவு குறித்த பேச்சுக்கள் பல வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது. தனது மக்கள் இயக்கத்தின் மூலமாக விஜய் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். பிற்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்காகவே இதெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார்கள். இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் 17 ஆம் தேதி விஜய், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/ மாணவியர்களுக்கு கல்வித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தது.

- Advertisement -

இந்த அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. விஜய் மிக விரைவிலேயே கட்சித் தொடங்கவுள்ளார், அதற்கான முன்னோட்டம்தான் இந்த விழா என்று பல பத்திரிக்கையாளர்கள் பேசத் தொடங்கினார்கள். அதன்படி இன்று விஜய், தொகுதி வாரியாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவியர்களுக்கு கல்வித்தொகை மற்றும் சான்றிதழகளை வழங்கினார்.

இந்த விழாவில் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பல விஷயங்களையும் அறிவுரைகளையும் கூறினார் விஜய். அப்போது அவர் மாணவர்களை பார்த்து, “நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள்” என்று கூறினார். விஜய் அவ்வாறு கூறியபோது மாணவர்களிடையே உற்சாக கைத்தட்டல் எழுந்தது.

- Advertisement -

அதன் பின் பேசிய விஜய், “அடுத்தடுத்து புதிய புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். ஆனால் நம்ம விரலை வைத்து நம்ம கண்களையே குத்திக்கொள்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. காசு வாங்கிட்டு ஓட்டு போடுவதைத்தான் நான் கூறுகிறேன். தமிழ்நாடு முழுக்க இருக்கிற ஒவ்வொரு மாணவ மாணவிகளும் அவரவர்களின் பெற்றோரிடம் சென்று ‘அம்மா, அப்பா இனிமேல் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க’ என்று கூறுங்கள். நீங்கள் கூறினால் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றும் அந்த விழாவில் மாணவர்களிடையே உரையாடினார் விஜய்.

 

- Advertisement -

சற்று முன்