- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி - இப்போ இல்லேன்னா எப்போ...

திடீரென அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி – இப்போ இல்லேன்னா எப்போ ப்ரோ… என கேள்வி எழுப்பிய ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. வேட்டைக்காரன், நான் அவன் இல்லை உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, நான் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து சலீம் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 திமிரு புடிச்சவன் கொலை ரத்தம் எமன் சைத்தான் அண்ணாதுரை ரத்தம் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடிகராக இசையமைப்பாளராக தயாரிப்பாளராக டைரக்டராக என பன்முகம் காட்டி வரும் விஜய் ஆண்டனி அடிக்கடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

- Advertisement -

சென்னையில் விஜய் ஆண்டனி 3.0 என்ற பெயரில் இன்று அவரது இசை நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்த நிலையில், காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த இசை நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, வணக்கம் நண்பர்களே சில எதிர்பாராத காரணங்களாலும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடக்க இருந்த விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

- Advertisement -

இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று அந்த பதிவில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்தாண்டு சென்னையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள், போக்குவரத்து நெரிசல் என பல விஷயங்களால் சர்ச்சை ஏற்பட்டது. அவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த இசை நிகழ்ச்சியை தற்போது ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி மீண்டும் எப்போது என்பதை விஜய் ஆண்டனி இந்த பதிவில் கூறாதது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்