- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக மாநாட்டில் திமுகவின் பிராண்டை உடைத்து சுக்குநூறாக்கிய தளபதி விஜய் - சர்கார் படத்துல சொன்ன...

தவெக மாநாட்டில் திமுகவின் பிராண்டை உடைத்து சுக்குநூறாக்கிய தளபதி விஜய் – சர்கார் படத்துல சொன்ன மாதிரியே பண்ணிட்டாரே பா…

- Advertisement -

நேற்று முன்தினம் மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில அரசியல் மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டு திடலில் திரண்டனர். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் மிக ஆவேசமாக பேசினார். குறிப்பாக திமுக பாஜக கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

அப்போது நடிகர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து விமர்சித்து பேசும்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா, உங்கள் ஆட்சியில் உண்மை இருக்கிறதா, நேர்மை இருக்கிறதா என்று பல கேள்விகளை எழுப்பி பேசினார். அப்போது வாட் அங்கிள், இட் ஈஸ் வெரி ராங்க் அங்கிள் என்றும் கூறி கலாய்த்தார்.

- Advertisement -

அத்துடன் அங்கு திரண்டிருந்த மக்களிடம் திமுக ஆட்சி குறித்து சில கேள்விகளை எழுப்பிய தலைவர் விஜய், கேட்குதா அங்கிள், ஸ்டாலின் அங்கிள் கேட்குதா என்றும் பேசினார். இப்படி தமிழக முதல்வரை அங்கிள் அங்கிள் என்று அழைத்து நடிகர் விஜய் பேசியது இப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

ஒரு கட்சிக்கு தலைவராக இருந்துக்கொண்டு தமிழகத்தின் முதல்வரை வயதில் மூத்தவரை நடிகர் விஜய், இப்படி அங்கிள் அங்கிள் என்று பேசியது சரியல்ல, இது அவரது பக்குவமின்மையை காட்டுகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் விஜய், தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என குறிப்பிட்டு பேசியதை பலர் பாராட்டவும் செய்கின்றனர்.

- Advertisement -

தேர்தல் சமயத்தில் திமுக வேட்பாளர்கள், மக்களுக்கு தந்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ. 1000 மகளிர் தொகை தருவதாக சொல்லிவிட்டு பிறகு, தகுதிவாய்ந்த குடும்ப பெண்களுக்கு மட்டுமே தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினை வழக்கமாக தளபதியார் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் அவரே சமீபத்தில் தன்னை பலரும் அப்பா என்று அழைப்பதாக சொல்லி பெருமைப்பட்டார்.

இந்த சூழலில் நடிகர் விஜய், தவெக நடத்திய மதுரை அரசியல் மாநாட்டில், ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று அழைத்து ஸ்டாலினின் தளபதியார், அப்பா போன்ற பிராண்டுகளை அடித்து நொறுக்கி சுக்குநூறாக்கி விட்டார். சர்கார் படத்தில் வில்லன்களிடம் உங்க பிராண்டை அழிப்பதில்தான்டா நான் எக்ஸ்பர்ட் என்று டயலாக் பேசுவார். இப்போது நிஜ அரசியலில் வாழ்க்கையிலும் சினிமாவில் பேசிய டயலாக்கை உண்மையாக்கி விட்டார் என்று விஜயை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்