- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்மாவின் ஆசைக்காக சாய்பாபா மந்திர் கட்டிய நடிகர் விஜய், இந்த விஷயத்தை செய்யாமல் மறந்தது சரிதானா?...

அம்மாவின் ஆசைக்காக சாய்பாபா மந்திர் கட்டிய நடிகர் விஜய், இந்த விஷயத்தை செய்யாமல் மறந்தது சரிதானா? – புதிய பஞ்சாயத்தை கிளப்பிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது மக்களால் அதிகளவில் கூர்ந்து கவனிக்கப்படும் மனிதராக மாறிவிட்டார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள அவர், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இதனால் அவரது செயல்பாடுகள் அனைத்தும் ரசிகர்களால், மக்களால் கவனிக்கப்படுகின்றன.

நடிகர் விஜய், நடிகராக இருந்த போது ரசிகர்களுக்கு மட்டுமே அவர் பிடித்தமானவராக இருந்தார். ஆனால் தவெக என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக மாறிய பிறகு, அவர் தமிழக அரசியல் களத்தில் முதல்வர் பதவிக்கு குறி வைத்த பிறகு, அவரது ஒவ்வொரு செயல்பாடும் அதிக கவனத்தை பெறுகின்றன.

அதனால் நடிகர் விஜய் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் அதிக கவனமும், நிறை குறைகளும் உடனடியாக விமர்சிக்கப்படுகின்றன. அந்த வகையில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகையை அள்ளி வழங்கி, பெற்றோர்களுடன் அவர்களை மேடையேற்றி கௌரவித்த விஜயின் செயல் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.

அதுமட்டுமின்றி நீட் தேர்வு குறித்து விஜய் பேசிய கருத்துகளும், அதில் தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்த விஜய், நீட் தேர்வுக்கு மாற்றாக சொன்ன சில ஆலோசனைகளும் பெரிய அளவில் பேசப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது. அதிலும் மத்திய அரசை திமுக போலவே ஒன்றிய அரசு என்று விஜய் குறிப்பிட்டதும் விவாத பொருளாக மாறியது.

நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன் கொரட்டூர் பகுதியில் தன் அம்மா ஷோபாவின் விருப்பத்துக்காக சாய்பாபா கோவில் ஒன்றை கட்டினார். பல கோடி ரூபாய் செலவில் விஜய் எழுப்பிய இந்த கோவில், சாய்பாபா மந்திர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனது அம்மா சாய்பாபாவின் தீவிர பக்தை என்பதால் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற விஜய் எழுப்பிய கோவில் இதுவாகும்.

இதுகுறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, சாய்பாபா கோவில் கட்டியதற்கு பதிலாக விஜய் ஒரு பள்ளியை அல்லது அவரது வசதிக்கு ஒரு கல்லூரியை கட்டி இருக்கலாம். அல்லது, இலவச ஸ்கேன் மையங்களை கட்டிவிட்டு இலவசமாக எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் எடுக்க ஏழை மக்களுக்கு உதவியிருக்கலாம். இலவச நீட் பயிற்சி மையங்களை மாவட்டந்தோறும் உருவாக்கி இருக்கலாம். அம்மாவின் விருப்பத்தை விட, தமிழக மக்களுக்கு பயன்படும் விதமாக இந்த விஷயங்களை செய்திருக்கலாம், என்று பேசியிருக்கிறார்.

சற்று முன்