- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்கிட்ட அப்படி ஒரு உடனடி ரியாக்‌ஷனை நான் எதிர்பார்க்கலே, எப்படி இப்படி நடந்துக்குறாருன்னு புரியல...

நடிகர் விஜய்கிட்ட அப்படி ஒரு உடனடி ரியாக்‌ஷனை நான் எதிர்பார்க்கலே, எப்படி இப்படி நடந்துக்குறாருன்னு புரியல – பிரபுதேவா ஓபன்டாக்

- Advertisement -

முதலில் நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபுதேவா. பின்னர் ஜெண்டில்மேன், சூரியன், வால்டர் வெற்றிவேல் போன்ற படங்களில் பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பிரபுதேவா காதலன், இந்து போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ராசய்யா, காதலா காதலா, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே, லவ் பேர்ட்ஸ், ஒன் டூ த்ரி, மனதை திருடி விட்டாய், வானத்தை போல, விஐபி, மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

- Advertisement -

தேவி, குலேபகாவலி, தேவி, தேவி 2, மைடியர் பூதம், பஹிரா, தேள் போன்ற சமீப காலத்திய அவரது படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. தமிழில் விஜய் நடித்த போக்கிரி, வில்லு போன்ற படங்களை பிரபுதேவா இயக்கினார். இதில் போக்கிரி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தியில் ரவுடி ரத்தோர் என்ற படத்தை பிரபுதேவா இயக்கி உள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பிரபுதேவா கூறியதாவது, மும்பையில் ரவுடி ரத்தோர் என்ற இந்தி படம் ஷூட்டிங் எடுத்துக்கொண்டு இருந்தேன். என்னோட டைரக்‌ஷன் படம் அது. அப்போது, விஜய் மும்பையில் பக்கத்தில் எங்கேயோ இருப்பதாக தகவல் கிடைத்தது. துப்பாக்கி பட ஷூட்டிங் என நினைக்கிறேன்.

- Advertisement -

அவருக்கு போன் செய்து, ஒரு பாடல் காட்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். வந்து ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுங்க, வாங்க அப்படியே ஜாலியாக ஒரு டான்ஸ் ஆடீட்டு போவோம் என்றேன். உடனடியாக ஓகே சொன்ன விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.

உடனே நான், விஜய், அக்‌ஷய் குமார் மூவரும் டான்ஸ் ஆடிய பாடல் காட்சி படம் எடுக்கப்பட்டது. அவ்வளவு பெரிய டாப் ஸ்டார் விஜய். நான் போனில் அழைத்தவுடனே நேரில் வந்துவிட்டார். அவரது உடனடி ரியாக்‌ஷனை நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் தயக்கமே இல்லாமல் டான்ஸ் ஆட வருமாறு நான் அப்போது கேட்டது இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது, என்று கூறி இருக்கிறார் பிரபுதேவா.

- Advertisement -

சற்று முன்