நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். திமுக அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளே கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த நிலையில், மக்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றம் இல்லை.
தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி பெயரை வைத்து பஸ் ஸ்டாண்ட் அரசு கட்டிடங்களை திறந்து வைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கே கருணாநிதி நாடு என மொத்தமாக பெயர் வைத்துவிடுங்கள் என்று பலர் விமர்சிக்கும் அளவுக்கு அரசின் செயல்பாடு இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பரிசு தராததும் திமுக அரசு மீதான வெறுப்பை மக்களுக்கு அதிகரிக்க செய்துள்ளது.
இந்த சூழலில் நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் குதித்திருப்பது, மக்கள் மத்தியில் நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருப்பதை, விக்கிரவாண்டியில் நடந்த அவரது அரசியல் மாநாடு நிரூபித்தது. பல லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டுவிட்டனர்.
ஆனால் விஜய், அரசியல் தலைவரான பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதலில் நடிகை திரிஷாவுக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு உள்ளதாக பல காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவாவில் நடந்த கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமண விழாவுக்கு நடிகர் விஜய், திரிஷாவுடன் தனி விமானத்தில் சென்றார்.
மேலும் பனையூரில் கட்சி அலுவலகத்துக்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை செய்தார். ஒர்க் ப்ரம் ஹோம் முறையில் நடிகர் விஜய் அரசியல் நடத்துகிறார் என்று பலரும் அதை விமர்சித்தனர். நேற்று பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த விஜய், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் கூறினார்.
திமுக அரசு அறிவித்த தை 1 தமிழ் புத்தாண்டு அல்ல, சித்திரை 1 தான் காலம் காலமாக தமிழர்கள் கொண்டாடி வரும் தமிழ் புத்தாண்டு என்று பலரும் விமர்சித்தனர். இந்த சூழலில் சமீபத்தில் காதல் திருமணம் செய்த கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் தலை பொங்கல் கொண்டாடிய நிலையில், அவர்களுடன் சேர்ந்து நடிகர் விஜயும் பொங்கலை கொண்டாடி இருக்கிறார். உங்க குடும்பத்துடன், மனைவி சங்கீதாவுடன் கொண்டாடாமல் புதுமண தம்பதியுடன் பொங்கலை கொண்டாடுகிறீர்களே என பலரும் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.





