- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேலிக்கூத்துக்கு ஆளான திரைப்படம்... காவல் நிலையத்திற்கு படி ஏறிய நடிகர்...

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேலிக்கூத்துக்கு ஆளான திரைப்படம்… காவல் நிலையத்திற்கு படி ஏறிய நடிகர்…

- Advertisement -

தமிழ் சினிமாவைப் போன்று தெலுங்கு சினிமாவிலும் பல முக்கிய நடிகர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் தமிழ் சினிமாவை காட்டிலும், அதிகபடியான நட்சத்திரங்களும், அவர்களைக் கொண்டாடும் ரசிகர்களும் தெலுங்கு திரை உலகில் அதிகம். ஜூனியர் என்டிஆர் சிரஞ்சீவி நாகார்ஜுன் ராம்சரண் பிரபாஸ் என நீளும் இந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கு சினிமாவில் பெரும்பாலானோர் வாரிசு நட்சத்திரங்களாகவே இருக்க, எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் விஜய் தேவரகொண்டா. தனது வசீகரிக்கும் பார்வையிலாலும், கட்டுமஸ்தான உடல் அமைப்பினாலும் ஏராளமான பெண் ரசிகர்களை அவர் பெற்றுள்ளார்.

- Advertisement -

இவருக்கு அந்த இடத்தை பெற்றுக் கொடுத்தது அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தான். கோபக்கார இளைஞனாக, 24 நேரமும் போதையில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய தேவர்கொண்டா. படம் முழுக்க சிகரெட் புகைத்தபடி கெட்ட உதாரணமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலில் என்னவோ மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் இஷ்டமான பட்டியலில் அவர் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது கீதா கோவிந்தம் திரைப்படம். தமிழ் திரைப்படமான குஷியின் கதையோட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

- Advertisement -

இப்படி அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்ததால், டாப் லிஸ்டில் இணைந்தார் விஜய் தேவரகொண்டா. ஆனால் சமீப காலமாக அவருக்கு எல்லாம் தோல்வியாகவே அமைந்து வருகின்றன. லைகர், குஷி உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வி அடைந்த சூழலில் சமீபத்தில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியானது. ஆனால் இதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

கீதா கோவிந்தம் திரைப்படத்தை இயக்கிய பரசுராம் இதனை எடுத்திருந்ததால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தொய்வான திரைக்கதை மற்றும் வெறுப்பேற்றிய இரண்டாம் பாதியில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ரசிகர்களை கவர தவறியது. இப்படியான சூழலில், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதில் திட்டமிட்டே ஃபேமிலி ஒன் திரைப்படத்தை சிலர் வெறுப்பு பேச்சு பேசுவதாகவும், இணையத்தில் தரக்குறைவாக பேசுவதால் இதன் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். இந்த தகவல் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்