ஆரம்பத்தில் ரேடியோஜாக்கியாக இருந்து பிறகு ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையாளராக தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்ஜே பாலாஜி. அதன்பிறகு நானும் ரௌடிதான் கவலை வேண்டாம் தேவி உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோலில் நடித்த அவர் எல்கேஜி படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் மாறினார்.
அதன்பிறகு அவர் நடித்த மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் சிங்கப்பூர் சலூன் போன்ற படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் இப்போது நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். நடிகர்கள் விஜய் ரஜினி போன்றவர்களிடம் கதை சொல்லும் அளவுக்கு ஒரு முன்னணி இயக்குனராகவும் அவர் மாறியிருக்கிறார்.
கருப்பு படத்தில் நடிகர் சூர்யாவுடன் திரிஷா ஷிவதா சுவாசிகா மற்றும் யோகிபாபு நட்டி இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு படம் வருகிற மே மாதம் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, கருப்பு படத்தின் கதையை முதலில் நடிகர் விஜயிடம் தான் சொன்னேன். அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. உடனே படப்பிடிப்பை துவங்க அவர் ஆர்வமாக இருந்தார்.
ஆனால் படத்தின் திரைக்கதையை நான் முழுமையாக எழுதி வடிவமைக்கவில்லை. அதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால் அப்போது என்னால் படத்தை துவங்க முடியவில்லை. அந்த விஷயத்தில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் போனதால் கருப்பு படத்தில் விஜய் நடிப்பதும் சாத்தியமின்றி போய்விட்டது.
அதன்பிறகு நடிகர் விஜய் அரசியலுக்கு போய்விட்டார். அதனால் கருப்பு படத்தில் விஜய்க்காக இருந்த விஷயங்கள் மாற்றம் செய்யப்பட்டு அந்த கதையில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருக்கிறார் என்று ஆர்ஜே பாலாஜி வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த படத்தில் வக்கீலாகவும் அய்யனார் சாமியாகவும் 2 கேரக்டர்களில் நடிகர் சூர்யா நடித்திருப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.





