- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்த பிறகு இப்படி ஒரு பதிலை சொல்வது… உருட்டா, உண்மையாங்கற சந்தேகத்தை...

அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்த பிறகு இப்படி ஒரு பதிலை சொல்வது… உருட்டா, உண்மையாங்கற சந்தேகத்தை வரவழைக்குதே? – ஏகே ரசிகர்கள் குழப்பம்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். இப்போது அவரது நடிப்பில் விடாமுயற்சி குட் பேட் அக்லி என்ற 2 படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருக்கின்றன. வருகிற 6ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸாக உள்ளது. ஏப்ரல் 10ம் தேதி என அறிவிக்கப்பட்ட குட்பேட் அக்லி ரிலீஸ், தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

இப்போது துபாயில் நடந்து வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார் பிஸியாக இருந்து வருகிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணிக்கு தலைவராக உள்ள அவர், வருகிற அக்டோபர் மாதம் வரை 10 நாடுகளில் நடிக்கும் கார் பந்தயங்களில் அணித் தலைவராக பங்கேற்க உள்ளார். அதனால் அடுத்த ஆண்டில்தான் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

துபாயில் நடந்த கார் பந்தயத்தில், அஜீத்குமாரின் அணி 3ம் இடத்தில் வெற்றி பெற்றது. இதற்கு தமிழ் சினிமா துறை சார்ந்த பலரும் அஜீத்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதை அடுத்து மத்திய அரசு நடிகர் அஜீத்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தினத்துக்கு முந்தைய தினமான கடந்த ஜனவரி 25ம் தேதி மாலை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அஜீத்குமாருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதற்கும் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆகியோரை தொடர்ந்து இந்த விருது அஜீத்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நேரடி போட்டியாளர்களாக கருதப்படுபவர்கள் நடிகர் அஜீத்குமார் மற்றும் நடிகர் விஜய். ஆனாலும் இருவருமே ஒருவரை ஒருவர் நண்பர் என்றுதான் சொல்லி வருகின்றனர். ஆனால் கார் பந்தயத்தில் 3ம் இடம், பத்ம பூஷன் விருது பெற்ற அஜீத்குமாருக்கு நடிகர் விஜய் வாழ்த்து சொல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இணையத்தில் வைரலானது.

இதையடுத்து, நடிகர் அஜீத்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட ஒரு பதிவில், நடிகர் அஜீத்குமார் துபாய் கார் பந்தயத்தில் 3ம் இடம் வந்த போதிலும், அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்த போதும் முதலில் போனில் அழைத்து வாழ்த்து சொன்னது நடிகர் விஜய்தான் என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த தகவலை அப்போதே சொல்லாமல், அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்த பிறகு சொல்வது ஏன், இது உண்மையா உருட்டா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்