- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் அப்படி ஒரு பார்மூலாவை கடைபிடிப்பவர் விஜய், இந்த விஷயத்தை தாக்கு பிடிப்பாரா - அட...

சினிமாவில் அப்படி ஒரு பார்மூலாவை கடைபிடிப்பவர் விஜய், இந்த விஷயத்தை தாக்கு பிடிப்பாரா – அட இந்த கோணத்துல யாருமே யோசிக்கலையே?

- Advertisement -

நடிகர் விஜய், இதுவரை சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர், எதிர்காத்தில் தமிழக அரசியலிலும் உச்ச நிலையில் இருப்போம் என்ற நம்பிக்கையில் மக்கள் தன் மீது வைத்துள்ள அபிமானத்தை வைத்து, அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். இப்போது கட்சி பெயரை மட்டுமே அறிவித்துள்ள விஜய், இன்னும் சில மாதங்களில் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.

வரும் செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்துள்ள தி கோட் படம் ரிலீஸாகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 21ம் தேதி, திருச்சியில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான மாநாட்டை விஜய் நடத்துகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் இந்த அரசியல் மாநாடு, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஏனெனில் 10 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்வதோடு, மாநாட்டுக்கு வரும் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்களுக்காக உணவு வசதி, வாகனங்கள் நிறுத்துமிட வசதி, கழிப்பிட வசதி, அவசரகால மருத்துவ வசதி என, பலவிதமான விஷயங்கள் குறித்தும் இப்போதே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார் நடிகர் விஜய்.

அதற்காக தான், வரும் ஜூலையில் துவங்குவதாக இருந்த தனது 69வது படத்தின் படப்பிடிப்பை, வரும் நவம்பர் மாதத்துக்கு விஜய் தள்ளி வைத்துள்ளார். மேலும், மாநாட்டுக்கு பிறகான அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தனக்கான மக்கள் ஆதரவை திரட்ட நேரில் மாவட்டம் வாரியாக மக்களை சந்திக்க, தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் விஜய் சினிமா ஷூட்டிங் என்றால் காலை 7 மணிக்கு கரெக்ட் ஆக வந்துவிடுவார். அடுத்து 2 மணி நேரம் கேரவனுக்குள் இருந்துக்கொண்டு அன்று நடிக்க வேண்டிய காட்சிகள், ஸ்கிரிப்ட் வசனங்கள் குறித்து பயிற்சி செய்துவிட்டு, மேக்கப்புடன் 9 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால், மாலை 6 மணிக்கு அன்றைய பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு, வெளியூராக இருந்தால் ஓட்டல் ரூமுக்கு கிளம்பி விடுவார். இரவு 6 மணிக்கு மேல் ஷூட்டிங்கில் பங்கேற்க மாட்டார்.

ஆனால் அரசியலில் நேரம் காலமே பார்க்க முடியாது. இரவு 10 மணி வரை அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். தேர்தல் காலங்களில் தொகுதிவாரியாக நேரம் காலம் பார்க்காமல் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய வேண்டும். எப்போதும் மக்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அவசர காலங்களில் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் சினிமா டைம் டேபிளில், ஷூட்டிங் பேக்கப், வீட்டில் ஓய்வு என வைத்திருக்கும் விஜய், 24 மணி நேர அரசியல் வாழ்க்கையில் எப்படி சமாளிக்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்